Home /News /entertainment /

Guns and Gulaabs - துல்கர் சல்மான் நடிக்கும் நெட்பிளிக்ஸ் சீரிஸ்

Guns and Gulaabs - துல்கர் சல்மான் நடிக்கும் நெட்பிளிக்ஸ் சீரிஸ்

dulquer salmaan

dulquer salmaan

Dulquer Salmaan | தமிழில் உருவாகியிருக்கும் 'ஹேய் சினாமிகா' திரைப்படம். இதனை நடன இயக்குனர் பிருந்தா இயக்கியுள்ளார். இது இயக்குனராக அவருக்கு முதல் திரைப்படம் ஆகும்.

துல்கர் சல்மான் நடிக்கும் நெட்பிளிக்ஸ் தொடருக்கு 'கன்ஸ் அண்ட் குலாப்ஸ்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் அறிமுகமான ஆரம்ப காலத்திலேயே தமிழ் இந்தித் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார் துல்கர் சல்மான்.

ஏற்கனவே இந்தியில் துல்கர் சல்மான் நடிப்பில் கர்வான், தி சோயா பேக்டர் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. விரைவில் சுப் - ரிவன்ஜ் ஆஃப் தி ஆர்டிஸ்ட் திரைப்படம் வெளிவர உள்ளது. தற்போது புதிய வெப் தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'தி ஃபேமிலி மேன்' தொடரை இயக்கிய ராஜ் & டிகே இந்தத் தொடரை இயக்குகிறார்கள். காமெடி திரில்லர் ஆக இந்தத் தொடர் உருவாக உள்ளது.

இதில் துல்கர் சல்மானுடன் இந்தியின் முக்கியமான இளம் நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.  துல்கர் சல்மான் நடிப்பில் இரு திரைப்படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. ஒன்று தமிழில் உருவாகியிருக்கும் 'ஹேய் சினாமிகா' திரைப்படம். இதனை நடன இயக்குனர் பிருந்தா இயக்கியுள்ளார். இது இயக்குனராக அவருக்கு முதல் திரைப்படம் ஆகும். பிப்ரவரி மாதம் இறுதியில் இத்திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.

Dulquer Salmaan, Hey Sinamika release date announced, dulquer salmaan net worth, dulquer salmaan best movies, dulquer salmaan wife, dulquer salmaan instagram, dulquer salmaan father, dulquer salmaan tamil movies, dulquer salmaan birthday, dulquer salmaan daughter, hey sinamika movie download, hey sinamika trailer, hey sinamika tamil movie release date, hey sinamika movie story, hey sinamika lyrics in tamil, hey sinamika lyrics in english, hey sinamika song download, துல்கர் சல்மான், துல்கர் சல்மான் ஹே சினாமிகா, துல்கர் சல்மான் படங்கள், துல்கர் சல்மான் தமிழ் படம், துல்கர் சல்மான் பிறந்தநாள்

மற்றொன்று மலையாளத்தில் தயாராகியிருக்கும் 'சல்யூட்'. ரோஷன் ஆண்ட்ரூ இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் துல்கர் சல்மான் போலீஸாக நடித்துள்ளார். இத்திரைப்படம் ஜனவரி 14 வெளியாவதாக இருந்து மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. இத்திரைப்படமும் விரைவில் வெளிவர உள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Actor, Entertainment, Netflix

அடுத்த செய்தி