முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஓணம் கொண்டாட்டமாக வெளியாகிறது துல்கர் சல்மானின் 'கிங் ஆஃப் கோதா'

ஓணம் கொண்டாட்டமாக வெளியாகிறது துல்கர் சல்மானின் 'கிங் ஆஃப் கோதா'

துல்கர் சல்மான்

துல்கர் சல்மான்

'கிங் ஆஃப் கோதா' படத்தின் படப்பிடிப்பு தற்போது தமிழ்நாட்டில் காரைக்குடியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகனாக திரையுலகில் அடியெடுத்து வைத்த துல்கர் சல்மான் இன்று தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியிருக்கிறார். துல்கர் சல்மான் திரையுலகில் அறிமுகமாகி 11 ஆண்டுகளாகிறது. அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான சீதா ராமம் தெலுங்கு, தமிழ், மலையாளம் மொழிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மலையாளம் மட்டுமல்லாமல் தமிழில் ஓகே கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், தெலுங்கில் மகாநடி, சீதா ராமம் என மற்ற மொழிகளிலும் பிரபலமான நடிகராக இருந்தவருகிறார். இந்தியிலும் இவரது படங்கள் வெளியாகியிருக்கிறது.

இந்த நிலையில் இவரது 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில், துல்கர் சல்மானின் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படம் 2023 ஓணம் அன்று திரைக்கு வருகிறது. பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல் படமான 'செகண்ட் ஷோ'வில் அவரது ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட துல்கரின் கெட்அப்பைப் போலவே, இப்படத்தில் துல்கரின் முரட்டுத்தனமான தோற்றமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் 'கிங் ஆஃப் கோதா' படத்தின் படப்பிடிப்பு தற்போது தமிழ்நாட்டில் காரைக்குடியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அபிலாஷ் என். சந்திரன் எழுத்தில் உருவாகும் இந்தத் திரைப்படம் பான்-இந்திய நட்சத்திரமான துல்கரின் அடுத்த பிரமாண்ட பிளாக் பஸ்டர் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஷ்யாம் ஷஷிதரன் செய்கிறார். ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர்.

First published:

Tags: Dulquer Salmaan