நடிகர்கள் மாதவன், கார்த்தி மற்றும் மகேஷ் பாபு ஆகியோர் ’ஹே சினாமிகா’ ட்ரைலரை வெளியிட்டனர்.
துல்கர் சல்மான், காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ‘ஹே சினாமிகா’. ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளது. படம் வரும் மார்ச் 3 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
Dhanush: மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்த பிறகு மகன் யாத்ராவுடன் தனுஷ் - கவனம் பெறும் புகைப்படம்!
படத்தில் அதிதி ராவ் ஹைதாரி மௌனாவாகவும், துல்கர் யாழனாகவும் நடித்துள்ளனர். ஒருவரையொருவர் காதலிக்கும் இவர்களுக்குள்
பிரச்னைகள் எழுவதை ட்ரைலரில் காண முடிகிறது. பின்னர் காஜல் அகர்வால் நுழைந்ததும் என்பதே படத்தின் கதை எனத் தெரிகிறது.
Happy Birthday Sivakarthikeyan: வெள்ளித்திரையில் வெற்றிக்கொடி நாட்டிய சின்னத்திரை பிரபலம்!
முழுக்க முழுக்க
ரொமான்ஸ் மற்றும் காமெடி காட்சிகள் நிறைந்த வகையில் வெளியான ஹே சினாமிகா படத்தின் ட்ரைலர், படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. ஹே சினாமிகா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர், படத்தின் டைட்டிலுக்கான காரணத்தைக் குறிப்பிட்டார்.
"மணிரத்னம் சாரின் 'ஹே சினாமிகா' பாடலுக்கு நான் தான் நடனம் அமைத்தேன், அதிலும் துல்கர் தான் நடித்திருந்தார். அந்த தலைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது, மணி சாரிடம் இதைப் பற்றிச் சொன்னபோது, அவர் சிரித்தபடி, “அப்படியானால், இப்போது நீங்கள் எனது படத்திலிருந்து தலைப்பை எடுக்கிறீர்களா?” என்றார். இது அவருக்கு நான் செலுத்தும் அஞ்சலி என்றும் கூறலாம் எனக் குறிப்பிட்டார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.