ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பொன்னியின் செல்வன் படத்தால் தனுஷ் படத்திற்கு வந்த சிக்கல்!

பொன்னியின் செல்வன் படத்தால் தனுஷ் படத்திற்கு வந்த சிக்கல்!

நானே வருவேன், பொன்னியின் செல்வன்

நானே வருவேன், பொன்னியின் செல்வன்

நானே வருவேன் படத்தை இந்த தேதியில் வெளியிடுவதை தவிர்த்திருக்க வேண்டும் என சினிமா துறையில் கூறுகின்றனர்.

  • News18
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொன்னியின் செல்வன் படம் வெளியாவதால் தனுஷ் நடிப்பில் வெளியாகும் நானே வருவேன் படத்திற்கு குறைவான திரையரங்குகளே கிடைத்துள்ளன.

தமிழ் சினிமாவில் இந்த வாரம் தனுஷின் நானே வருவேன் மற்றும் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் வெளியாகின்றன. இதில் நானே வருவேன் 29-ம் தேதியும், பொன்னியின் செல்வன் 30-ம் தேதியும் வெளியாகின்றன.

சோழர்களின் வரலாற்றை பறைசாற்றும் விதமாக எடுக்கப்பட்டிருக்கும் பொன்னியின் செல்வன் இந்த தேதியில் வெளியாகிறது என்பதை பல மாதங்களுக்கு முன்பே அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

கல்கியின் நாவல், மணிரத்னத்தின் இயக்கம், பல முன்னணி நட்சத்திர பட்டாளத்தின் பங்களிப்பு, சோழர்களின் வரலாறு என பல பெருமைகளை தாங்கி வருகிறது பொன்னியின் செல்வன். இதனால் அந்தப் படத்திற்கு  ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

10-ம் நூற்றாண்டு கதை என்பதால் சுமார் 220 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளனர். அந்த தொகையை திரும்ப எடுக்க வேண்டியது மிகவும் அவசியம். எனவே, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை உள்ளிட்ட ஐந்து நாட்கள் கொண்ட விடுமுறையில் படத்தை வெளியிடுகின்றனர்.

பொன்னியின் செல்வன் படத்தை சினிமா துறையினர் தாண்டி, ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். அதுவும் தமிழர்களின் வரலாறு உள்ளடங்கம் இருப்பதால் முதல்நாளே பார்க்க வேண்டும் என்று நினைக்கிறனர்.

அதிலும் முதல் மூன்று இடங்களில் இருக்கும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இருக்கும் ஓப்பனிங் போல இந்தப் படத்திற்கு உள்ளது என திரையரங்கு உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

பொன்னியின் செல்வன் படத்திற்கு பெரும் வரவேற்பு இருந்தாலும், ஐந்து நாட்கள் விடுமுறையை பயன்படுத்திக்கொள்ள நடிகர் தனுஷின் நானே வருவேன் படக்குழுவும் திட்டமிட்டது. இதனால் பொன்னியின் செல்வனுக்கு ஒரு நாள் முன்பு நானே வருவேன் படத்தை வெளியிடுவது என முடிவெடுத்து சமீபத்தில் அறிவித்தனர்.

இதன் மூலம் நானே வருவேன் படத்தை முதல் நாள் மட்டும் அதிக திரையில் திரையிட முடியும். அத்துடன் அதிக ரசிகர்கள் முன்கூட்டியே பார்க்க முடியும். அவர்கள் மூலம் படம் நன்றாக இருக்கிறது என்ற தகவல் பரவினால், இந்தப் படத்திற்கும் ரசிகர்கள் அதிக அளவில் வருவார்கள் என கணக்கிட்டுள்ளனர். ஒருவேலை படத்திற்கு எதிர்மறை விமர்சனம் கிடைத்தால் திரையரங்கு வசூலில் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

பொன்னியின் செல்வன், நானே வருவேன் படங்கள் ஒரே சமயத்தில் வெளியாவதால் திரையங்கு உரிமையாளர்கள் சற்று சங்கடத்திற்கு உள்ளாகினர். ஏனென்றால், பொன்னியின் செல்வன் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் அதிக திரையரங்குகளை அதற்கு ஒதுக்க நினைத்தனர். அதேபோல் தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திருச்சிற்றம்பலம் படம் அதிக லாபத்தை கொடுத்தது. இதனால் தனுஷ் படத்தையும் ஒதுக்கிவிட முடியாது என்ற சூழல் நிலவியது.

இந்த காரணங்களால்  திரையரங்குகளை ஒதுக்கீடு செய்வதில் சற்று தடுமாற்றம் இருந்துள்ளது. இருந்த போதிலும் தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்கு 60 முதல் 65 சதவீத திரையரங்குகளும் (600 - 650), நானே வருவேன் படத்திற்கு 35 முதல் 40 சதவீத திரையரங்குகளும் (350 - 400) ஒதுக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும் தமிழகத்தில் உள்ள முக்கிய திரையரங்குகள் அனைத்தும்  பொன்னியின் செல்வன் படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் படத்துடன் வெளியாவதால் நானே வருவேன் படத்திற்கு நினைத்த திரையரங்குகள் கிடைக்கவில்லை. இருந்தபோதிலும் துணிச்சலுடன் களமிறங்குகின்றனர். எது எப்படி இருந்தாலும் பட வெளியீட்டுக்கு பிறகு படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து திரையரங்குகளின் எண்ணிக்கை கூடவும் குறையவும் வாய்ப்பு உள்ளது என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேசமயம் நானே வருவேன் படத்தை இந்த தேதியில் வெளியிடுவதை தவிர்த்திருக்க வேண்டும் என சினிமா துறையில் கூறுகின்றனர். அதுவும் பொன்னியின் செல்வன் தமிழர்களின் பெருமை. மிகப்பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. அந்தப் படைப்பிற்கும், பெருமைக்கும் மதிப்பளித்திருக்க வேண்டும். இது போன்ற படம் தெலுங்கில் எடுக்கப்பட்டிருந்தால், மூன்று வாரங்களுக்கு பெரிய படங்களை  வெளியிடுவதை தவிர்த்திருப்பார்கள் என்று சினிமா துறையினர்  சுட்டிக்காட்டுகின்றனர்.

எது எப்படியோ! பொன்னியின் செல்வன் படத்திற்கு முன்பதிவு தொடக்கி பல காட்சிகளுக்கான டிக்கெட்கள் விற்பனையாகியிள்ளன. முன்னணி நாயகர்களின் படங்களுக்கு இருக்கும் வரவேற்பை போல் இந்தப் படத்திற்கும் எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் முதல் நாளில் சுமார் 20 கோடி ரூபாய் வசூலை மிக எளிதில் கடக்கும் என திரை வர்த்தகர்கள் கணிக்கின்றனர்.

Also read... Varisu: 2023 பொங்கலுக்கு பிரமாண்டமாக வெளியாகும் விஜய்யின் வாரிசு!

இதன் மூலம் இந்த ஆண்டு வெளியான படங்களில்,  முதல் நாளில் அதிக வசூல் செய்த முதல் ஐந்து படங்களின் பட்டியலில் பொன்னியின் செல்வன் நிச்சயம் முக்கிய இடத்தை பிடிக்கும் எனவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் படம் நன்றாக இருக்கிறது என்ற ரிசல்ட் கிடைத்தாலே, தமிழத்தில் 100 கோடி ரூபாய் ஷேர் என்ற இலக்கை தொடும் என உறுதியாக கூறுகின்றனர்.  அதேபோல் நானே வருவேன் படத்திற்கு தற்போது வரவேற்பு இல்லை என்றாலும், வெளியீட்டுக்கு பின் படம் நன்றாக இருக்கிறது என்ற விமர்சனம் கிடைத்தாலும் அந்தப் படமும் நல்ல வசூலை எடுக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor dhanush, Entertainment, Ponniyin selvan