கொரோனா அச்சத்தால் மலேசியாவில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க மறுத்த இளையராஜா...!

கொரோனா அச்சத்தால் மலேசியாவில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க மறுத்த இளையராஜா...!
மலேசிய குழுவினருடன் இளையராஜா
  • News18
  • Last Updated: March 6, 2020, 12:54 PM IST
  • Share this:
கொரோனா அச்சத்தால் மலேசியாவில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க இளையராஜா முதலில் மறுத்துவிட்டார் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்களை மெய்மறக்கச் செய்ய பல ஆண்டுகள் ஹிட் பாடல்கள் உடன் மீண்டும் மலேசியாவில் இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார்.

சென்னையில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வரும் மார்ச் 14 அன்று மலேசிய சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார் என்று மலேசிய குழுவினர் தெரிவித்தனர்.


இசைக் குழு மற்றும் பின்னணிப் பாடகர்களின் ஆதரவுடன் நடைபெற உள்ள இந்த இசை நிகழ்ச்சி ஒரே இரவில் கிட்டத்தட்ட 5 தசாப்த கால மதிப்புள்ள இசை நினைவுகளை மீண்டும் உருவாக்க உறுதியளித்திருக்கிறது.

மலேசியாவில் உள்ள இசை ஆய்வாளர்களுக்கு இளையராஜா அளித்துள்ள பங்களிப்பை உணர்ந்து மலேசியாவில் துணை தூதரகம் மற்றும் மலேசியா சுற்றுலா மேம்பாட்டு வாரியம் நிகழ்ச்சி அமைப்பாளர் மோஜோ திட்டங்கள் எஸ்டி மற்றும் மலிண்டோ ஏர் நிறுவனம் ஆகியோரின் ஆதரவுடன் இளையராஜாவுக்கு இன்று பாராட்டும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

முதலில் மலேசியாவில் இசை நிகழ்ச்சி என்றவுடன் பயந்த போன இளையராஜா, தற்பொழுது கொரோனா வைரஸ் நடுமுழுக்க பரவி இருக்கிறது எப்படி அங்கு வந்து இசை நிகழ்ச்சி நடத்துவது என்று வர மறுத்துள்ளார்.பின்பு தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இசை நிகழ்ச்சியும் தன்னையும் பாதுகாக்க உறுதியளித்த  பின்னர் வர ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், இசை நிகழ்ச்சிக்கு வருகின்றவர்கள், மலேசியா விமானநிலையம் வருபவர்கள் என்று அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவர் என்றும் மலேசிய குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Also see...
First published: March 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading