பிரபல டப்பிங் கலைஞரும் நடிகையுமான ரவீனா ரவியின் தந்தை திடீர் மரணம்

ரவீனா ரவியின் குடும்பம்

ஸ்ரீஜாவின் கணவரும், ரவீனாவின் தந்தையுமான ரவீந்திரநாதன் உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளார்.

 • Share this:
  டப்பிங் கலைஞரும், நடிகையுமான ரவீனா ரவியின் தந்தை, ரவீந்திரநாதன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

  பிரபல டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா ரவி. இவர் மலையாளம் மற்றும் தமிழில் 2000-க்கும் மேற்பட்ட படங்களில் முன்னணி ஹீரோயின்களுக்கு குரல் கொடுத்துள்ளார். அதோடு வீரம், வேதாளம், காளி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். ஸ்ரீஜாவின் கணவர் ரவீந்திரநாதன். இவர்களுக்கு ரவீனா என்ற மகள் இருக்கிறார்.

  ரவீனா ஏமி ஜாக்சன், மாளவிகா மோகனன் உள்ளிட்ட முன்னணி நடிகைகளுக்கு தமிழில் குரல் கொடுத்துள்ளார். அதோடு மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் முன்னணி டப்பிங் கலைஞராக பணி புரிந்து வருகிறார். தவிர ’ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் மூலம் நடிகையாகவும் அறிமுகமானார் ரவீனா.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில் ஸ்ரீஜாவின் கணவரும், ரவீனாவின் தந்தையுமான ரவீந்திரநாதன் உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளார். இவரது இறுதி சடங்கு கேரளாவில் நடைப்பெறவிருக்கிறது. ரவீனாவின் தந்தை மறைவுக்கு விஷால் உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: