• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நேரடியாக ஓடிடியில் வெளியாகும் தெலுங்கு த்ரிஷ்யம் 2...!

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் தெலுங்கு த்ரிஷ்யம் 2...!

த்ரிஷ்யம் 2

த்ரிஷ்யம் 2

தெலுங்கு த்ரிஷ்யத்தில் வெங்கடேஷ், மீனா நடித்திருந்தனர். ஆஷா சரத் செய்த போலீஸ் அதிகாரி வேடத்தில் நதியா. முன்னாள் நடிகை ஸ்ரீப்ரியா த்ரிஷ்யத்தை தெலுங்கில் ரீமேக் செய்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய த்ரிஷ்யம் படத்தைப் போலவே அதன் இரண்டாம் பாகமும் ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெற்றது. இரண்டாம் பாகம் கன்னடம், தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டன. இதில் தெலுங்கு த்ரிஷ்யம் 2 நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

சமீபத்தில் அதிக மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட படம் என த்ரிஷ்யத்தை சொல்லலாம். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. சீன மொழியிலும் படத்தை ரீமேக் செய்தனர். த்ரிஷ்யம் இரண்டாவது பாகம் இந்த வருட ஆரம்பத்தில் அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக வெளியானது. ரசிகர்கள் படத்தை ரசித்தனர், ஆதரவு அளித்தனர். முதல் பாகத்தைப் போல் கன்னடம், தெலுங்கு, இந்தி, சீன மொழிகளில் படத்தை ரீமேக் செய்ய உரிமை வாங்கப்பட்டது. தமிழில் கமலின் சம்மதத்துக்காக காத்திருக்கிறார்கள்.

தெலுங்கு த்ரிஷ்யத்தில் வெங்கடேஷ், மீனா நடித்திருந்தனர். ஆஷா சரத் செய்த போலீஸ் அதிகாரி வேடத்தில் நதியா. முன்னாள் நடிகை ஸ்ரீப்ரியா த்ரிஷ்யத்தை தெலுங்கில் ரீமேக் செய்தார். படம் வெற்றி பெற்றது. அதே நபர்களை வைத்து த்ரிஷ்யம் 2 படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தார் ஜீத்து ஜோசப். என்ன காரணமோ ஸ்ரீப்ரியாவுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. வெங்கடேஷ், மீனா, நதியா ஆகியோர் முதல் பாகத்தில் செய்த அதே வேடத்தை இரண்டாவதிலும் செய்திருந்தனர்

Also read... பழனியில் தொடங்கிய மம்முட்டி, லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் தமிழ்ப் படம்!

பல மாதங்கள் முன்பே படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட உள்ளனர். அமேசான் பிரைம் வீடியோ படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியுள்ளது. விரைவில் படம் வெளியாகும் தேதியை அறிவிக்க உள்ளனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: