ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மலையாள டிரைவிங் லைசன்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு எஸ் ஜே சூர்யா.?

மலையாள டிரைவிங் லைசன்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு எஸ் ஜே சூர்யா.?

Simbu and SJ Surya

Simbu and SJ Surya

Silambaran TR | டிரைவிங் லைசன்ஸ் படத்தை இந்தியில் 'செல்பி' என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். இதில் அக்ஷய் குமார், இம்ரான் ஹாஷ்மி நடிக்கின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் பிரித்விராஜ், சுராஜ் வெஞ்சாரமூடு நடித்த டிரைவிங் லைசன்ஸ். முன்னணி நடிகர் ஒருவருக்கும் அவரது தீவிர ரசிகருக்கும் இடையில் ஏற்படும் ஈகோ மோதலை பற்றிய திரைப்படம் இது. இந்த திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரித்விராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான இரு திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. ஒன்று 2019 இல் வெளியான டிரைவிங் லைசன்ஸ். இன்னொன்று 2020 இல் வெளியான ஐயப்பனும் கோஷியும். இதில் ஐயப்பனும் கோஷியும் திரைப்படம் தெலுங்கில் 'பீம்ல நாயக்' என்ற பெயரில் பவன் கல்யாண் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அப்படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தை இந்தியிலும் ரீமேக் செய்யவுள்ளனர்.

டிரைவிங் லைசன்ஸ் படத்தை இந்தியில் 'செல்பி' என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். இதில் அக்ஷய் குமார், இம்ரான் ஹாஷ்மி நடிக்கின்றனர். தற்போது இதனை தமிழிலும் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநாடு படத்தில் நடித்த சிம்புவும், எஸ்.ஜே சூர்யாவும் இதில் நடிக்க இருப்பதாகவும் வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இந்த ரீமேக்கை இயக்க இருப்பதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. இந்த ரீமேக்கை பிரித்விராஜ் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.  அய்யப்பனும் கோஷியும் படத்தை இயக்கிய சாச்சிதான் டிரைவிங் லைசென்ஸ் படத்தின் திரைக்கதையை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Driving License, Silambarasan, SJSurya, Tamil Cinema