Home /News /entertainment /

ஐஸ்வர்யா ராஜேஷின் 'டிரைவர் ஜமுனா' ட்ரைலர் வெளியீடு!

ஐஸ்வர்யா ராஜேஷின் 'டிரைவர் ஜமுனா' ட்ரைலர் வெளியீடு!

ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ்

வாடகை கார் ஓட்டுநர் ஐஸ்வர்யா ராஜேஷின் 90 நிமிட திக் திக் பயணமே டிரைவர் ஜமுனா திரைப்படத்தின் திரைக்கதை.

ஐஸ்வர்யா ராஜேஷ்  நடித்துள்ள டிரைவர் ஜமுனா திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் நாயகிளுக்கு முக்கியத்துவம் தரும் கதையை அதிகம் தேர்ந்தெடுக்கும் நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளார். அந்த வகையில் அவர் நடித்த காக்கா முட்டை, கனா உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றி அடைந்தன. அந்த வரிசையில் தற்போது டிரைவர் ஜமுனா என்ற திரைப்படத்தை தேர்வு செய்து நடித்துள்ளார்.

6 வருடமாக அந்த நடிகையின் மகனுக்கு விஷால் செய்து வரும் மிகப் பெரிய உதவி!

கிங்ஸ்லின் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். டிரைவர் ஜமுனா திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் வாடகை கார் ஓட்டுநராக நடித்துள்ளார்.  வாலாஜாபாத்தில் இருந்து ஈ.சி ஆர் செல்ல வாடகை கார் எடுத்து குற்ற சம்பவத்தில் ஒரு கும்பல் ஈடுபடுகிறது.  அந்த வாடகை கார் ஓட்டுனராக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் 90 நிமிட பயணங்கள் எப்படி அமைந்தது?  அவர்களிடமிருந்து எவ்வாறு தப்பித்தார்? என்று ரீதியில் டிரைவர் ஜமுனா  திரைப்படத்தை எடுத்துள்ளனர்.



யூடியூப்பில் வெளியாகியுள்ள அந்தப் படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற தொடங்கியுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகவுள்ள டிரைவர் ஜமுனா படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sreeja
First published:

Tags: Aiswarya Rajesh, Kollywood, Tamil Cinema

அடுத்த செய்தி