Drishyam 2 : த்ரிஷ்யம் 2 படத்தின் ரீமேக் வேலைகளை தொடங்கிய ஜீத்து ஜோசப்

த்ரிஷ்யம் 2 ரீமேக்

பொதுவாக ஒரு படத்தின் 2-ம் பாகம் முதல் பாகத்தைப் போல பெரிதாக வரவேற்பைப் பெறாது. ஆனால் இந்த விதியை த்ரிஷ்யம் 2 தகர்த்திருக்கிறது.

  • Share this:
    த்ரிஷ்யம் 2 படம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், அதன் ரீமேக் வேலைகளை தொடங்கியிருக்கிறார் இயக்குநர் ஜீத்து ஜோசப்.

    மலையாளத்தில் 2015-ஆம் ஆண்டு வெளியான த்ரிஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் மோகன்லால், மீனா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதற்குக் கிடைத்த வரவேற்பை அடுத்து தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

    Sivaangi: கலைமாமணி விருதால் சிவாங்கி வீட்டில் மகிழ்ச்சி வெள்ளம்!

    இதில் இந்தியில் சுமாராகவும் மற்ற மொழிகளில் சிறப்பான வெற்றியையும் பெற்றது. இந்நிலையில் தற்போது த்ரிஷ்யம் படத்தின் 2-ம் பாகம் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பே இதனை இயக்க, மோகன்லால், மீனா நடித்துள்ளனர். இப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது. பொதுவாக ஒரு படத்தின் 2-ம் பாகம் முதல் பாகத்தைப் போல பெரிதாக வரவேற்பைப் பெறாது. ஆனால் இந்த விதியை த்ரிஷ்யம் 2 தகர்த்திருக்கிறது.

    இதற்கிடையே த்ரிஷ்யம் 2 வெளியான கையோடு, படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகளை இன்று தொடங்கியுள்ளார் இயக்குநர் ஜீத்து ஜோசப். நடிகர் வெங்கடேஷ் மற்றும் படக்குழுவினரோடு இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். தவிர, பாபநாசம் 2 என்ற பெயரில் இப்படம் தமிழில் ரீமேக்காகவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: