Drishyam 2: த்ரிஷ்யம்-2 இந்தி ரீமேக் உரிமையை வாங்கிய தயாரிப்பு நிறுவனம்!

திரிஷ்யம்-2

இந்த வருடம் பிப்ரவரியில், த்ரிஷ்யம் 2 அமேசான் பிரைமில் வெளியானது. படம் சூப்பர் ஹிட்.

  • Share this:
    த்ரிஷ்யம் 2 படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் வாங்கியுள்ளது.

    2013-ல் மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய த்ரிஷ்யம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. தமிழ் கமலை வைத்து ஜீத்து ஜோசப்பே அதனை இயக்கினார். தெலுங்கில் ஸ்ரீப்ரியா, கன்னடத்தில் பி.வாசு, இந்தியில் நிஷிகாந்த் காமத் இயக்கினார்கள்.

    இந்த வருடம் பிப்ரவரியில், த்ரிஷ்யம் 2 அமேசான் பிரைமில் வெளியானது. படம் சூப்பர் ஹிட். அதனைத் தொடர்ந்து தெலுங்கில் ஜீத்து ஜோசப் த்ரிஷ்யம் 2-வை இயக்கினார். அதில் வெங்கடேஷ், மீனா நடித்தனர். கன்னடத்தில் நவ்யா நாயர், ரவிச்சந்திரன் நடிப்பில் பி.வாசு இயக்குகிறார். இந்தி த்ரிஷ்யத்தில் அஜய் தேவ்கான், ஸ்ரேயா நடித்திருந்த நிலையில், த்ரிஷ்யம் 2 படத்தின் உரிமையை தயாரிப்பாளர்கள் குமார் மங்கத் பதாக், அபிஷேக் பதாக் வாங்கியுள்ளனர். இவர்களின் பனோரமா ஸ்டுடியோ இன்டர்நேஷனல்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

    இந்தி த்ரிஷ்யத்தை இயக்கிய நிஷிகாந்த் காமத் இறந்த நிலையில், த்ரிஷ்யம் 2 படத்தை ஜீத்து ஜோசப்பே இயக்கலாம் என்கின்றன செய்திகள். தற்போது மோகன்லால் நடிப்பில், ராம் என்ற த்ரில்லர் படத்தை ஜீத்து ஜோசப் இயக்கி வருகிறார். இதில் த்ரிஷா முக்கிய வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: