பி.வாசு இயக்கத்தில் ரீமேக் செய்யப்படும் த்ரிஷ்யம் 2

பி.வாசு இயக்கத்தில் ரீமேக் செய்யப்படும் த்ரிஷ்யம் 2

த்ரிஷ்யம் 2

மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் 2 கன்னத்தில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

 • Share this:
  மலையாளத்தில் மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'த்ரிஷ்யம்'. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டது. இதையடுத்து மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில்‘த்ரிஷ்யம் 2’ உருவானது. கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது.

  இந்த வரவேற்பால் த்ரிஷ்யம் 2 படத்தின் ரீமேக் பணிகள் மும்முரமாகத் தொடங்கப்பட்டன. அதில் முதலாவதாக தெலுங்கு ரீமேக் தொடங்கப்பட்டுள்ளது. வெங்கடேஷ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை ராஜ்குமார் மற்றும் சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. தெலுங்கிலும் ஜீத்து ஜோசப் இயக்குகிறார்.

  தற்போது த்ரிஷ்யம் 2 கன்னட ரீமேக் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.வாசு இயக்கும் இந்தப் படத்துக்கு த்ரிஷ்யா 2 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரவிச்சந்திரன், நவ்யா நாயர், பிரபு, ஆஷா சரத் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.  ஈ4 என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. கன்னடத்தில் த்ரிஷ்யா என்ற பெயரில் முதல் பாகத்தை பி.வாசு இயக்கியிருந்தார். அதிலும் நவ்யா நாயர், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இளையராஜா இசைமைத்திருந்தார்.
  Published by:Sheik Hanifah
  First published: