த்ரிஷ்யம் 2 மலையாளப் படத்தின் சீன ரீமேக் உரிமை பெரிய தொகைக்கு விற்கப்பட்டிருக்கிறது. மலையாளத்தில் தயாராகும் படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி ரீமேக் உரிமைகள் வாங்கப்படுவதுண்டு. அரிதாக வங்கம், போஜ்புரி மொழி உரிமைகள் வாங்கப்படும். அபூர்வமாக சீன உரிமை வாங்கப்பட்டிருக்கிறது.
த்ரிஷ்யத்தின் முதல் பாகம் 2013-ல் வெளியானது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்த இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தி தவிர மற்ற அனைத்து மொழிகளிலும் படம் ஹிட். இதன் சீன ரீமேக்கான Wù Shā (ஆங்கில டைட்டில் Sheep Without a Shepherd) 2019 டிசம்பரில் வெளியானது. Sam Quah இந்த ரீமேக்கை இயக்கியிருந்தார்.
த்ரிஷ்யத்தை அப்படியே எடுக்க சாம் குவா விரும்பியுள்ளார். அப்படியே எடுத்தால் படம் வெளியே வராது என்ற உண்மை நிலையை நண்பர்களும் பணம் முதலீடு செய்தவர்களும் வலியுறுத்த, த்ரிஷ்யம் கதையை சிறிது மாற்றியமைத்தார் . முதலாவதாக கதை நடக்கும் இடத்தை ஒரு கற்பனை நகரமாக மாற்றினார். நாயகனின் குடும்பத்தை சித்திரவதை செய்கிறவர்களாக சீன போலீஸுக்குப் பதில் வேறு போலீஸை காண்பித்தார்.
கிளைமாக்ஸில் நாயகனும், அவன் குடும்பமும் நிரபராதிகள் என விடுவிக்கப்படுவதை மாற்றி, நாயகன் சரணடைவதாக காட்டினார். இந்த மாற்றங்கள் செய்திராவிடில் சீனாவில் படம் வெளியாகியிருக்காது.
2019 டிசம்பர் 13 சீனாவில் வெளியான இந்தப் படம்
168 மில்லியன் டாலர்களை வசூலித்தது. மிகப்பெரிய வெற்றி. அந்த நேரம் வெளியான டோனி யென் நடித்த IP Man 4 படத்தின் வசூலை இப்படம் முறியடித்தது.
த்ரிஷ்யம் 2 படம் இந்த வருடம் பிப்ரவரியில் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இதன் தெலுங்கு, இந்தி, கன்னட ரீமேக்குகள் தயாராகின்றன. இந்நிலையில் சீன ரீமேக் உரிமையும் விற்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தையும் சீன அரசுக்கேற்ப மாற்றித்தான் எடுக்கப் போகிறார்கள். கேரளா கம்யூனிச தேசம், அங்கு எடுத்தப் படத்தை இன்னொரு கம்யூனிச தேசமான சீனாவில் அப்படியே எடுக்க முடியவில்லை. சர்வாதிகார கம்யூனிசத்துக்கும், ஜனநாயக கம்யூனிசத்துக்குமான வித்தியாசம் என்பது இதுதானா.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.