சினமாவில் நடிகர், நடிகையாக ஆசையா? நடிக்க வாய்ப்பு தரும் பிரபல தயாரிப்பு நிறுவனம்!

சின்ன பட்ஜெட்டில் வளரும் நடிகர்களை வைத்து அதிக படங்கள் தயாரிக்க ட்ரீம் வாரியர் திட்டமிட்டுள்ளது.

 • Share this:
  தமிழின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பல்வேறு வயதுகளைச் சேர்ந்த நடிகர், நடிகைகளை தங்களின் புதிய படங்களுக்காக தேர்வு செய்கின்றனர். திறமை இருக்கும் யாரும் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.

  சகுனி, ஜோக்கர், அருவி, என்ஜிகே, கைதி இந்த வருடம் வெளியான சுல்தான் உள்பட ஏராளமான படங்களை எம்.எஸ்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. சிபி, ஆன்ட்ரியா நடிக்கும் வட்டம் மற்றும் சர்வானந்த், ரிது வாமா நடிக்கும் பெயரிடப்படாத படம் ஆகியவற்றையும் தயாரித்து வருகின்றனர்.

  சின்ன பட்ஜெட்டில் வளரும் நடிகர்களை வைத்து அதிக படங்கள் தயாரிக்க ட்ரீம் வாரியர் திட்டமிட்டுள்ளது. இதற்காக குழந்தை நட்சத்திரங்கள் முதல் 60 வயது வரையான நடிகர்கள் அவர்களுக்கு தேவைப்படுகிறார்கள். அது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

  Also Read : லகான் படத்தில் ஆரம்பித்த காதல் பயணம்... அமீர் கான் - கிரண் ராவ் லவ் ஸ்டோரி

  குழந்தை நட்சத்திரங்கள் - வயது 6-8
  நடிகர்கள் - வயது 30-50
  நடிகர்கள் (மலையாளி) - வயது 50-60
  நடிகைகள் - வயது 20-25
  நடிகைகள் - 30-35  திறமை இருப்பவர்கள் தங்கள் புகைப்படம், இதற்கு முன்னால் திரைப்படங்களில் நடித்திருந்தால் அதன் விவரம், தங்களைப் பற்றிய வீடியோ அனைத்தையும் dreamcasting2021@gmail.com என்ற மெயிலிலுக்கு அல்லது 9487250850 / 8056199021 என்ற வாட்ஸ்அப் எண்களுக்கு அனுப்பலாம்.

  Also Read : பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து திடிரென வெளியேறிய வனிதா!

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: