• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தமிழில் துல்கர் சல்மானின் குருப் படத்தை வெளியிடும் ட்ரீம் வாரியர்

தமிழில் துல்கர் சல்மானின் குருப் படத்தை வெளியிடும் ட்ரீம் வாரியர்

குருப் திரைப்படம்

குருப் திரைப்படம்

மோகன்லாலின் மரைக்கார் - அரபிக் கடலின்டெ சிம்ஹம் ஓடிடியில் வெளியாவது உறுதியான நிலையில், கேரள திரையரங்குகள் எதிர்பார்க்கும் பெரிய படம் துல்கர் சல்மான் நடித்திருக்கும் குருப்.

  • Share this:
    துல்கர் சல்மான் நடித்திருக்கும் குருப் திரைப்படம் நவம்பர் 12-ம் தேதி வெளியாகிறது. இதன் தமிழ் பதிப்பின் தமிழக விநியோக உரிமையை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

    கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி முதல் கேரளாவில் திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டன. டாக்டர், தெலுங்கு லவ் ஸ்டோரி படத்தின் மலையாள டப்பிங், நோ டைம் டூ டை, வெனம் 2, பிருத்விராஜ் நடித்த ஸ்டார் போன்ற படங்கள் முதல்கட்டமாக கேரளாவில் வெளியாகின. அதையடுத்து அண்ணாத்த, எனிமி படங்கள் தீபாவளிக்கு வெளியானது. இதில் எந்தப் படமும் சரியாகப் போகவில்லை. அண்ணாத்த, எனிமி இரண்டும் கேரளாவில் சாராசரிக்கும் குறைவாக வசூலித்துள்ளன.

    மோகன்லாலின் மரைக்கார் - அரபிக் கடலின்டெ சிம்ஹம் ஓடிடியில் வெளியாவது உறுதியான நிலையில், கேரள திரையரங்குகள் எதிர்பார்க்கும் பெரிய படம் துல்கர் சல்மான் நடித்திருக்கும் குருப். இன்சூரன்ஸுக்காக வேறொருவரை கொலை செய்து, அடையாளங்களை அழித்து, அது தான் என்று நாடகமாடிய சுகுமாரன் குருப்பைப் பற்றிய திரைப்படம் இது. கேரளாவின் புகழ்பெற்ற வழக்கான இதனை இதற்கு முன்பும் படமாக எடுத்திருக்கிறார்கள். இப்போது மீண்டும் குருப் என்ற பெயரில் எடுத்துள்ளனர். இதில் சுகுமாரன் குருப்பாக துல்கர் சல்மான் நடித்துள்ளார்.

    நவம்பர் 12 இந்தப் படம் தமிழிலும் வெளியாகிறது. தமிழக திரையரங்கு விநியோக உரிமையை எஸ்ஆர் பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வாங்கியுள்ளது. இதேபோல் இதன் கன்னட திரையரங்கு உரிமையை அதிதி என்டர்பிரைசஸும், தெலுங்கு விநியோக உரிமையை லியோ செலுலாயிடும் வாங்கியுள்ளன.

    துல்கரின் குருப் ரசிகர்களை பெருமளவு திரையரங்குக்கு அழைத்து வரும் என கேரள திரையரங்குகள் நம்புகின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: