• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அருவி பட இயக்குனரின் புதிய படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்!

அருவி பட இயக்குனரின் புதிய படத்தை தயாரிக்கும் பிரபல நிறுவனம்!

எஸ்.ஆர்.பிரபு - அருண் பிரபு

எஸ்.ஆர்.பிரபு - அருண் பிரபு

அருவி அளவுக்கு அதிக பார்வையாளர்களை வாழ் சென்றடையவில்லை.

  • Share this:
    அருவி, வாழ் படங்களை இயக்கியவர் அருண் பிரபு புருஷோத்தமன். அவரது புதிய படத்தை முன்னணி நிறுவனம் ஒன்று தயாரிக்கிறது.

    2016-ல் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் அருவி திரைப்படம் வெளிவந்தது. வழக்கமான திரைப்படங்களின் கதை, காட்சி மொழியிலிருந்து மாறுபட்டிருந்த அருவியை ரசிகர்ளும், விமர்சகர்களும் கொண்டாடி ஏற்றுக் கொண்டனர். படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

    அதையடுத்து கடந்த ஜுலையில் அருண் பிரபு புருஷோத்தமனின் இரண்டாவது படமான வாழ் சோனிலிவ் ஓடிடியில் நேரடியாக வெளியானது. நடிகர் சிவகார்த்திகேயன் தனது சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பாக இந்தப் படத்தை தயாரித்திருந்தார். படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. அருவி அளவுக்கு அதிக பார்வையாளர்களை வாழ் சென்றடையவில்லை.

    இந்நிலையில் அவரது புதிய படத்தை தயாரிக்க எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. அருவி படத்தையும் இவர்களே தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தகவலை எஸ்.ஆர்.பிரபு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: