Home /News /entertainment /

கதை சொல்ல வேண்டாம், எழுதிக் கொடுங்கள் - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

கதை சொல்ல வேண்டாம், எழுதிக் கொடுங்கள் - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

எஸ்.ஆர்.பிரபு

எஸ்.ஆர்.பிரபு

முழு கதையையும் எப்படி 3 பக்கத்தில் சொல்ல முடியும் எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

    உங்கள் ஸ்கிரிப்ட்டால் எங்களை திருப்தி படுத்த முடியவில்லை என்றால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

    ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் நிறுவனர்களில் ஒருவர் எஸ்.ஆர்.பிரபு. ஜோக்கர், அருவி, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி உள்ளிட்டப் படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது. மூத்த நடிகர் சிவக்குமாரின் உறவினராக எஸ்.ஆர்.பிரபு, சூர்யா, கார்த்தி படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தயாரிப்பார்.

    இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், திரையுலகில் பாதி பேர் கதை கேட்பதிலிருந்து ஸ்கிரிப்ட் வாசிப்பிற்கு மாறிவிட்டனர். கதை விவரிப்புக்காக வலியுறுத்தும் ஒவ்வொரு நபர்களுக்கும் பதிலளிப்பது மிகவும் சோர்வாக இருக்கிறது.



    "எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் மூலம் நீங்கள் எங்களை திருப்திப் படுத்த முடியாவிட்டால், நாங்கள் அதற்கு பொறுப்பு இல்லை" என காட்டமாக தெரிவித்துள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் அப்படி என்றால் முழு கதையையும் படிக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? என்றும், படிக்கும் போது சாதாரணமாக தெரியும் ஒரு கதையை திரைக்கதை மூலம் அட்டகாசமாக மாற்ற முடியும். அதற்கு கதை கேட்டால் தான் விவரிக்க முடியும் எனவும் தெரிவித்து வருகின்றனர்.







    அண்ணன் அருண் விஜய்க்கு வாழ்த்து சொன்ன வனிதா விஜயகுமார்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதோடு 2-3 பக்கங்களில் கதையை எழுதி அனுப்புமாறு ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் உதவி இயக்குநர்களுக்கு அனுப்பிய பதில் மின்னஞ்சலை மேற்கோளிட்டு, முழு கதையையும் எப்படி 3 பக்கத்தில் சொல்ல முடியும் எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Tamil Cinema

    அடுத்த செய்தி