• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் சமந்தாவுடன் நடிக்க விருப்பமா?

ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் சமந்தாவுடன் நடிக்க விருப்பமா?

சமந்தா

சமந்தா

தற்போது வட்டம், ஒக்க ஒக்க ஜீவிதம் ஆகிய படங்களை தயாரித்து வருகின்றனர். இதையடுத்து சமந்தா நடிக்கும் படம் ஒன்றையும் தயாரிக்கின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தனது 30 வது படத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் தேவை என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ட்ரீம் வாரியர். எஸ்ஆர் பிரகாஷ் பாபு, எஸ்ஆர் பிரபு ஆகியோரின்நிறுவனம் இது. சகுனி, ஜோக்கர், தீரன் அதிகாரம் ஒன்று, அருவி, கைதி, சுல்தான் உள்பட முக்கியமான படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது. ஜெய் பீம் படத்தை இயக்கியிருக்கும் ஞானவேலின் முதல் படம் கூட்டத்தில் ஒருத்தனை தயாரித்ததும் இந்நிறுவனமே

தற்போது வட்டம், ஒக்க ஒக்க ஜீவிதம் ஆகிய படங்களை தயாரித்து வருகின்றனர். இதையடுத்து சமந்தா நடிக்கும் படம் ஒன்றையும் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தை தற்காலிகமாக புரொடக்ஷன் நெ.30 என குறிப்பிடுகின்றனர். சாந்தரூபன் ஞானசேகரன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிக்க நடிகர்கள் தேவை என ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் விளம்பரம் தரப்பட்டுள்ளது. நடிகர்கள் விவரம் வருமாறு...



குழந்தை நட்சத்திரம் (பெண்) 4-6 வயது

குழந்தை நட்சத்திரம் (பெண்) 6-8 வயது

நடிகர் (ஆண்) 25-30 வயது

நடிகர் (ஆண்) 65-70

நடிகர் (பெண்) 25-27

நடிகர் (பெண்) 32-36

Also read... தீபாவளிக்கு குடும்பத்துடன் சிரித்து மகிழ ஹாட் ஸ்டார் வெளியிடும் எம்ஜிஆர் மகன்!



இந்த வயதுக்கு பொருத்தமானவர்கள் நடிப்புத் திறமையும், விருப்பமும் இருப்பின் தங்களுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை முன்அனுபவம் குறித்த விவரங்களுடன் 7019634134 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கோ அல்லது production30dwp@gmail.com என்ற மெயிலுக்கோ அனுப்பவும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: