• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • KGF Chapter 2: கேஜிஎஃப் சேப்டர் 2 தமிழக உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

KGF Chapter 2: கேஜிஎஃப் சேப்டர் 2 தமிழக உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

கே.ஜி.எஃப் 2

கே.ஜி.எஃப் 2

ஒரு படத்தின் இரண்டாம் பாகத்துக்கு எப்போதும் வரவேற்பு அதிகமாக இருக்கும். பாகுபலி நல்ல உதாரணம்.

  • Share this:
    பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகமான கேஜிஎஃப் சேப்டர் 2 படத்தின் தமிழக உரிமையை ட்ரீம் வாரியர்ஸ் வாங்கியுள்ளது.

    கேஜிஎஃப் திரைப்படம் பலவகைகளில் முக்கியமானது. கன்னடத்தில் இதுவரை தயாரான படங்களில் அதிக செலவில் எடுக்கப்பட்ட படம் இது. அதேபோல் கன்னடம் தவிர்த்து தமிழ், தெலுங்கு உள்பட பல பிற மொழிகளில் வெளியான படமும் இதுவே. இந்தியாவில் அதிகம் வசூலித்த கன்னடப் படமும் இதுவே. படத்தின் இரண்டாம் பாகத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். பாகுபலிக்கு அடுத்து இந்திய அளவில் ரசிகர்கள் காத்திருக்கும் இரண்டாம் பாகம் என்றால் அது கேஜிஎஃப் சேப்டர் 2.

    ஒரு படத்தின் இரண்டாம் பாகத்துக்கு எப்போதும் வரவேற்பு அதிகமாக இருக்கும். பாகுபலி நல்ல உதாரணம். கேஜிஎஃப் சேப்டர் 2-வையும் ரசிகர்கள் அதேயளவு எதிர்பார்க்கின்றனர். பாகுபலி 2 தமிழகத்தில் வசூலித்த அளவிற்கு இல்லையெனினும், அதில் 75 சதவீதமாவது வசூலிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கடும் போட்டிக்கு நடுவில் இந்தப் படத்தின் தமிழக விநியோக உரிமையை எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் கைப்பற்றியிருக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சகுனி படத்தை தயாரித்து சினிமாவில் நுழைந்த இந்நிறுவனம், கடைசியாக சுல்தான் படத்தை தயாரித்தது. சிபி மற்றும் சர்வானந்த் நடிப்பில் தலா ஒரு படத்தை இந்நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    கேஜிஎஃப் சேப்டர் 2 விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: