ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'க்ளைமேக்ஸ் வசனம்.. எல்லாருக்கும் பாடம்'.. 'முத்துக்கு முத்தாக' படத்தை உருகி பாராட்டிய ராமதாஸ்

'க்ளைமேக்ஸ் வசனம்.. எல்லாருக்கும் பாடம்'.. 'முத்துக்கு முத்தாக' படத்தை உருகி பாராட்டிய ராமதாஸ்

முத்துக்கு முத்தாக - ராமதாஸ்

முத்துக்கு முத்தாக - ராமதாஸ்

2011-ல் இயக்குநர் ராசு மதுரவன் இயக்கிய முத்துக்கு முத்தாக படம் குடும்ப உறவுகளை மையப்படுத்தி இயக்கப்பட்டிருந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

முத்துக்கு முத்தாக படத்தின் இறுதிக் காட்சியில் வரும் விஷயத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என  பாமக நிறுவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முகநூலில் பதிவிட்டுள்ள அவர், ”நம்மள படைச்சது சாமின்னு சொல்றாங்க. ஆனா, நம்மள படைச்ச உண்மையான சாமி அப்பனும், ஆத்தாளுந்தான். அவங்க போனதுக்கப்புறம் போயிட்டாங்களேன்னு அழுகுறதை விட வாழ்ற காலத்துல அவங்கள பொக்கிஷமா பாத்துக்கிறது ஒவ்வொரு புள்ளையோட கடமை”

’முத்துக்கு முத்தாக’ என்ற திரைப்படத்தை நான் இன்று பார்த்தேன். அந்த படத்தின் இறுதிக்காட்சியில் வரும் வசனம் தான் இது. அனைவரும் பின்பற்ற வேண்டிய பாடம் இது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஹோம்லி லுக்கில் பூஜா ஹெக்டே! குவியும் லைக்ஸ்...

2011-ல் இயக்குநர் ராசு மதுரவன் இயக்கிய முத்துக்கு முத்தாக படம் குடும்ப உறவுகளை மையப்படுத்தி இயக்கப்பட்டிருந்தது. இதில் விக்ராந்த், நட்டி நடராஜ், இளவரசு, சிங்கம் புலி, சரண்யா பொன்வண்ணன், மோனிகா, ஓவியா, ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Dr Ramadoss