ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

திருமணமான 4 மாதத்தில் குழந்தை அறிவிப்பு.. சூப்பர் ஹீரோயின் - நயன்தாராவை விமர்சித்த கிருஷ்ணசாமி..!

திருமணமான 4 மாதத்தில் குழந்தை அறிவிப்பு.. சூப்பர் ஹீரோயின் - நயன்தாராவை விமர்சித்த கிருஷ்ணசாமி..!

கிருஷ்ணசாமி

கிருஷ்ணசாமி

தமிழ் சினிமாவால் தான் தமிழ் இளைஞர்களின் கலாச்சாரம் சீர்கெடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  திருமணமான 4 மாதங்களில் குழந்தை அறிவிப்பு வெளியிட்ட சூப்பர் ஹீரோயின் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.

  நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாய், தந்தையாகிவிட்டோம் என பதிவிட்டிருந்தனர்.

  இந்த விவகாரம் பலராலும் பேசப்பட்டு வரும் நிலையில், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அவரது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், சிதம்பரத்தில் பள்ளி சீருடையில் நடந்த திருமணத்தையும் விமர்சித்துள்ளார்.

  அதில், சிறுவர்கள் அவர்களின் ஹீரோயிசத்தை காட்டும் விதமாக தாலி கட்டி கொண்டதாகவும், தமிழ் சினிமாவால் தான் தமிழ் இளைஞர்களின் கலாச்சாரம் சீர்கெடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

  தொடர்ந்து திருமணமான 4 மாதங்களில் குழந்தை பிறந்துவிட்டதாக அறிவிக்கும் சூப்பர் ஹீரோயின் எனந் நடிகை நயன்தாராவையும் விமர்சித்துள்ளார். இதனால் சினிமாவை அடியோடு ஒழித்து கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Director vignesh shivan, Dr Krishnasamy, Nayanthara, Vignesh Shivan