சோனாக்ஷி சிங்கா மற்றும் ஹூமா குரேஷி இணைந்து நடிக்கும் Double XL பாலிவுட் திரைப்படத்தில் சிலம்பரசன் பாடிய பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
சிலம்பரசனின் நண்பரும் தமிழ் நடிகருமான மஹத் தற்போது ஹிந்தியில் உருவாகும் Double XL என்ற படத்தில் நடித்து வருகிறார். அதில் சோனாக்ஷி சிங்கா மற்றும் ஹூமா குரேஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Double XL திரைப்படம் காமெடி ட்ராமா படமாக உருவாகியுள்ளது. ஹெல்மெட் படத்தை இயக்கிய ராட்ராம் ரமணி இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் போஸ்டர்களும் ஏற்கெனவே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட அனைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில் படம் நவம்பர் 4ம் தேதி இப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.
Double XL படத்தில் Sohai Sen இசையமைப்பில் உருவாகும் Taali Taali என்ற பாடலை சிலம்பரசன் பாடியுள்ளார். இது குறித்து செய்தியை பகிர்ந்த ஹூமா குரேஷி, Double XL குடும்பத்திற்கு உங்களை வரவேற்கிறோம். எங்கள் படத்தில் பாடல் பாடியுள்ள உங்களுக்கு நாங்கள் நன்றிகடன் பட்டுள்ளோம். நீங்கள் இல்லாமல் Taali Taali பாடல் முழுமையடைந்திருக்காது என சிம்புவிற்கு நன்றி கூறியுள்ளார். Double XL படத்தின் மூலம் மஹத் இந்திக்கு செல்கிறார். அவருக்காகவே நடிகர் சிம்பு அந்தப் பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also read... '26 வயசுல கல்யாணம்.. 30 வயசுல சோ ஸ்வீட் அம்மா' - பிக்பாஸ் ஜனனி சொன்ன எதிர்கால பிளான்!
Here’s my first song in Hindi,
My debut as a singer in Bollywood & this one is for my friend @MahatOfficial Onwards & upwards ! Proud of you ❤️
Good luck to the whole team of doubleXL Guys get ready to groove with the #TaaliTaali song! https://t.co/4WrANraUxU
— Silambarasan TR (@SilambarasanTR_) October 14, 2022
இந்நிலையில் இந்தப் படத்தில் சிம்பு பாடியுள்ள Taali Taali என்ற பாடலின் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. ஹிந்தியில் சிம்பு பாடும் பாடலுக்கு பப்பில் மஹத், ஹூமா குரேஷி உள்ளிட்டோர் பப்பில் மகிழ்ச்சியாக நடமாடுகின்றனர். மேலும் இந்த பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே அதிக பார்வையாளர்களை எட்டியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Mahat, Actor Simbhu