• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • திரைக்கதையாசிரியரான டபுள் மீனிங் தயாரிப்பாளர்

திரைக்கதையாசிரியரான டபுள் மீனிங் தயாரிப்பாளர்

அருண்மொழி மாணிக்கம்

அருண்மொழி மாணிக்கம்

தமிழ் சினிமாவில் இன்றைக்கு படம் தாயாரிக்கும் தயாரிப்பாளர்களில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்களுக்கே வாய்ப்பு தருகின்றனர்.

  • Share this:
    சிபி நடித்திருக்கும் மாயோன் படத்தின் டீஸர் வெளியீட்டு விழா இந்த வாரம் நடந்தது. படத்தின் டைட்டில் லுக்கையும் இதனையொட்டி வெளியிட்டனர். டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

    ஐயாயிரம் வருடங்கள் பழமையான கோயிலில் கற்பனைக்கு எட்டாத அதிசயங்கள் இருப்பதையும், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமிகள் கோயிலில் இருப்பதைப் போன்ற பெரும் செல்வம் அதனுள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதையும் ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்டைச் சேர்ந்த சிபி மற்றும் அவரது டீம் கண்டுபிடிக்கிறது. அதனை வெளிநாட்டு கடத்தல்காரன் கவர்ந்து செல்ல முயற்சிக்கிறான். அதனை எப்படி முறியடிக்கிறார்கள் என்பது கதை. கிஷோர் என்ற அறிமுக இயக்குனர் படத்தை இயக்கியுள்ளார்.

    இந்தப் படத்தின் கதையைக் கேட்டு பிடித்துப்போய் தயாரிப்பாளர் ஒருவர் படமாக்குகிறார். கிட்டத்தட்ட படம் முடிந்த பிறகு போஸ்ட் புரொடக்ஷனுக்கு அவரிடம் பணமில்லாமல் போக, படத்தின் லைன் புரொடியூசர் ஹரி கிருஷ்ணன் படத்தை டபுள் மீனிங் புரொடக்ஷனுக்கு கைமாற்றிவிடுகிறார். இவர்கள் மிஷ்கினின் சைக்கோ உள்பட பல படங்களை தயாரித்தவர்கள். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்து தற்போது ரிலீஸ் செய்யும் கட்டத்துக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். இளையராஜா படத்துக்கு இசையமைத்துள்ளார்.

    படத்தின் டைட்டில் லுக்கில் இயக்குனர் பெயருக்கு முன்பாக திரைக்கதை என்று அருண் மொழி மாணிக்கம் என்ற பெயர் கொட்டை எழுத்துக்களில் உள்ளது. இவர்தான் டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர். ஏற்கனவே முழுமையாக எழுதப்பட்டு முக்கால்வாசி முடிக்கப்பட்ட பின்பே மாயோன் படத்தை அருண் மொழி மாணிக்கம் வாங்குகிறார். அதன் கதை, திரைக்கதையில் அவருக்கு சிறிதும் பங்கில்லை. இயக்குனர் கிஷோருக்கு இது முதல் படம் என்பதாலும், படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையிலும் தனக்கு சம்பந்தமில்லாத திரைக்கதைக்கு தன்னுடைய பெயரை போட்டுக் கொண்டிருக்கிறார் அருண் மொழி மாணிக்கம்.

    Double meaning producer becomes screenwriter, maayon, maayon movie, maayon tamil movie, maayon movie release date, maayon movie songs, maayon meaning, maayon kishore, mayon god, sibiraj wife, sibiraj father, sibiraj wiki, sibiraj height, sibiraj sister, sibiraj son, மாயோன், மாயோன் திரைப்படம், மாயோன் தமிழ் திரைப்படம், மாயோன் திரைப்பட வெளியீட்டு தேதி, மாயோன் திரைப்பட பாடல்கள், மாயோன் பொருள், மாயோன் கிஷோர், மாயோன் கடவுள், சிபிராஜ் மனைவி, சிபிராஜ் தந்தை, சிபிராஜ் விக்கி, சிபிராஜ் உயரம், சிபிராஜ் சகோதரி, சிபிராஜ் மகன் ,
    மாயோன்


    தமிழ் சினிமாவில் இன்றைக்கு படம் தாயாரிக்கும் தயாரிப்பாளர்களில் பெரும்பான்மையானவர்கள் இளைஞர்களுக்கே வாய்ப்பு தருகின்றனர். இளைஞர்கள் மீதுள்ள நம்பிக்கையால் இதனை அவர்கள் செய்வதில்லை. நம்மை கேள்வி கேட்க மாட்டார்கள், படத்தில் நாம் விரும்பிய எதையும் செய்யலாம் என்ற நோக்கத்தில் இவர்களுக்கு வாய்ப்பளிக்கிறார்கள். அதில் ஒருவர்தான் அருண் மொழி மாணிக்கம். படத்தில் பணிபுரிந்த பெப்சி தொழிலாளர் உள்பட தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் சம்பள பாக்கி இன்னும் தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இவர்மீதுள்ளது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: