முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ‘திருமணம் திருமணம் என பிள்ளைகளை பெற்றோர் டார்ச்சர் செய்யாதீர்கள்…’ - சிம்பு பேச்சு

‘திருமணம் திருமணம் என பிள்ளைகளை பெற்றோர் டார்ச்சர் செய்யாதீர்கள்…’ - சிம்பு பேச்சு

சிம்பு

சிம்பு

நல்ல படங்கள், ரசிகர்களை சந்தோஷப்படுத்துற, பெருமைப் படுத்துற மாதிரியான படங்களை நான் பண்ணுவேன். – சிம்பு

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சமூகம் கொடுக்கும் அழுத்தங்களால் தவறான திருமணங்கள் அதிக எண்ணிக்கையில் நடப்பதாக நடிகர் சிலம்பரசன் கூறியுள்ளார். வெந்து தணிந்தது காடு படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிம்பு இவ்வாறு பேசினார்.

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெந்து தணிந்தது காடும் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

இந்தப் படம் வரும் 15-ம்தேதி வெளியாகவுள்ளது. தமிழகத்தில் வெந்து தணிந்தது காடு படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்நிலையில் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிம்பு பேசியது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. படக்குழுவினரை பாராட்டி பேசிய சிம்பு, திருமணம் குறித்து தனக்கு இருக்கும் எண்ணத்தையும் வெளிப்படுத்தினார்.

சிம்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன்… கதை தொடர்கிறது…

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘அனைத்து பெற்றோர்களிடமும் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். திருமணம் திருமணம் என்று கூறி டார்ச்சர் செய்ய வேண்டாம். சமூகம் கொடுக்கும் அழுத்தங்களால் தவறான திருமணங்கள் அதிக எண்ணிக்கையில் நடக்கின்றன.

பிள்ளைகள் அவர்களுடைய வாழ்க்கையை அவர்களே பார்த்துக் கொள்ளட்டும். மேலே இருப்பவர்பார்த்து அவருக்கான ஒருவரை அனுப்புவார்.

என் ரசிகர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. நல்ல படங்கள், ரசிகர்களை சந்தோஷப்படுத்துற, பெருமைப் படுத்துற மாதிரியான படங்களை நான் பண்ணுவேன்.

அம்மா அப்பாவ பாத்துக்கோங்க… கடைசி காலத்துல கை விட்றாதீங்க.. அது என் வேண்டுகோள்’ என்று பேசினார்.

சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்திருக்கிறார். ராதிகா சரத்குமார், சித்தீக், நீரஜ் மாதவ், ஏஞ்செலினா ஆப்ரகாம் உள்ளிட்டோர் படத்தில் இடம்பெற்றுள்ளார்கள்.

இந்த படத்திலிருந்து ஏற்கனவே காலத்துக்கும் நீ வேணும், மறக்குமா நெஞ்சம் என 2 பாடல்கள் வெளியாகி ஹிட்டாகியுள்ளன. இந்நிலையில் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

First published:

Tags: Simbu