முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'சுவைக்கு அடிமையாகி வாழ்க்கையை பாழாக்காதீங்க' - கெளதமி கொடுத்த ஃபுட் அட்வைஸ்!

'சுவைக்கு அடிமையாகி வாழ்க்கையை பாழாக்காதீங்க' - கெளதமி கொடுத்த ஃபுட் அட்வைஸ்!

விழாவில் பேசிய கௌதமி

விழாவில் பேசிய கௌதமி

நடிகை கௌதமி கொடிய கேன்சர் நோயில் இருந்து மீண்டு வந்துள்ளார்.திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்திய பெண்களுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு கலந்து கொண்டு பேசினார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Andhra Pradesh, India

வினாடி நேரம் மட்டுமே நாவில் நிற்கும் சுவைக்கு அடிமையாகி வாழ்க்கையை பாழ்படுத்தி கொள்ளாதீர்கள் பொதுமக்களுக்கு கௌதமி வேண்டுகோள் விடுத்துள்ளார்

திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர்களுக்கு ஏற்படும் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நேற்று திருப்பதியில் நடைபெற்றது.

நடிகை கௌதமி கொடிய கேன்சர் நோயில் இருந்து மீண்டு வந்துள்ளார்.திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்திய பெண்களுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு கலந்து கொண்டு பேசினார்.

கெளதமி

கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கௌதமி பெண் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார். இந்நிலையில் அவர் இன்று காலை திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது இயற்கை விவசாயத்தை தவிர்த்து விளைவிக்கப்படும் பொருட்கள், சுவை கூட்டப்பட்ட உணவு பொருட்கள் ஆகியவற்றை சாப்பிடுவதன் மூலம் பல்வேறு உடல் பாதைகள் ஏற்படுகின்றன என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் அத்தகைய உணவுகள் மூலம் கிடைக்கும் சுவைக்கு அடிமையாகி நாம் அவற்றை மீண்டும் மீண்டும் சாப்பிட்டு ஆரோக்கியத்தை கெடுத்து கொள்கிறோம்.

கெளதமி

எனவே பொதுமக்கள் அத்தகைய உணவு பொருட்களை தவிர்த்து இயற்கை விவசாயம் மூலம் கிடைக்கும் பொருட்களை வாங்கி சமைத்து சாப்பிட வேண்டும்.

நமது பாரம்பரியமான உணவு முறைகளை பின்பற்றி இன்னும் பிறக்காத குழந்தைகளின் வாழ்க்கையையும் நாம் மேம்படுத்த முயற்சிகளை எடுக்க வேண்டும்.

Read More: பெண்களின் வாழ்க்கையை கண்முன் நிறுத்தும் கலர்ஸ் தமிழின் புதிய சீரியல்கள்!

இது போன்ற பிரச்சாரத்தை கேட்பவர்களில் ஆயிரம் பேரில் ஒரே ஒருவர் பின்பற்றினால் கூட படிப்படியாக உணவு முறையில் மாற்றம் ஏற்படும் என்று அப்போது கூறினார்.

கவுதமி 80 களில் டாப் மோஸ்ட் நடிகையாக வலம் வந்தவர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்துள்ளார்.  மேலும் கன்னட, ஹிந்தி, மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார். தென்னிந்தியா சினிமாவின் சிறந்த நடிகைகளில் ஒருவரான இவர், இப்பொழுது தொலைக்காட்சி தொடர்கள், நிகழ்ச்சி மற்றும் ஆடைவடிவமைப்பு என பன்முக செயல்களை செய்து வருகிறார். குரு சிஷ்யன் படத்தின் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமானார்.ரஜினிகாந்த் மற்றும் பிரபுவுடன் சேர்ந்து பல படங்களில் நடித்து உள்ளார்.

கவுதமி 35 வயதில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பின்பு அதிலிருந்து மீண்டு வந்தார். Life again foundation என்ற நிறுவனத்தை உருவாக்கி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 360க்கும் மேற்பட்ட புற்றுநோய் கேம்ப்பும் நடத்தியுள்ளார்

First published:

Tags: Cancer, Kamal hassan, Tirupati, Tirupati temple