• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டாம் - சூர்யா ரசிகர் மன்றம்

தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டாம் - சூர்யா ரசிகர் மன்றம்

சூர்யா

சூர்யா

படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பும் அங்கீகாரமும் தான் இந்த மண்ணில் மாற்றம் நிகழும் என்பதற்கான நம்பிக்கை.

 • Share this:
  நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

  நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் ஞானவேல் இயக்கியுள்ளார். சூர்யாவின் 39-வது படமான இதில், பிரகாஷ் ராஜ், கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

  இந்நிலையில் ஜெய் பீம் படத்தில் வன்னியர் சமூகத்தை இழிவுப்படுத்திவிட்டதாக பிரச்னை எழுந்தது. இதையடுத்து பாமக-வினர் தொடர்ந்து ஜெய் பீம் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து, நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் சூடு பிடித்து வரும் நிலையில், சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், “சூர்யா அண்ணன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜெய்பீம்’ படம் அதிகாரத்துக்கு எதிரான மக்களின் போர்க்குரலாக உலகமெங்கும் ஒலிக்கிறது.

  படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பும் அங்கீகாரமும் தான் இந்த மண்ணில் மாற்றம் நிகழும் என்பதற்கான நம்பிக்கை. அதேநேரம் படத்துக்கு எதிரான கருத்துகளை ஒருசிலர் திட்டமிட்டுப் பரப்பி வருவதையும் நாம் கவனிக்கிறோம்.

  சூர்யா அண்ணனுக்கு எதிராகப் பேசப்படும் நியாயமற்ற விஷயங்களை அறம் சார்ந்த இந்த சமூகம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது. அதனால் எப்போதும் போல் நாம் பொறுமையாக இருப்பது தான் சிறப்பு.

  சூர்யா அண்ணன் எந்த சாதி, மத வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவர் என்பதை நாம் மட்டும் அல்ல, இந்த நாடும் நன்கறியும். அதனால் எவருக்கும் விளக்கமோ பதிலடியோ கொடுக்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை.

  கட்டுப்பாடும் பொறுமையும் கொண்ட நம் மன்றத்தினர் பேச்சாகவோ சமூக வலைத்தளப் பதிவுகளாகவோ எவ்வித எதிர்வினையும் ஆற்ற வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

  Jai Bhim, jai bhim suriya, jai bhim suriya fans club, jai bhim movie controversy, jai bhim vanniyar issue, suriya fans club, suriya vanniyar issue, ஜெய் பீம், ஜெய் பீம் திரைப்படம், suriya jai bhim, jai bhim review, jai bhim review rating, ஜெய் பீம் சூர்யா, சூர்யா ரசிகர் மன்றம், சூர்யா வன்னியர் சர்ச்சை, சூர்யா, நடிகர் சூர்யா, சூர்யா 2டி எண்டெர்டெயின்மெண்ட், சூர்யா திரைப்படங்கள், ஜெய் பீம், ஜெய் பீம் ட்ரைலர், 2d entertainment movies
  சூர்யா ரசிகர் மன்றம்


  "தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற”

  என்ற அண்ணன் நமக்கு கற்பித்த பாதையில் பயணிப்போம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Shalini C
  First published: