• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தமிழில் வெளியாகிறது டோண்ட் ப்ரீத் 2 - ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழில் வெளியாகிறது டோண்ட் ப்ரீத் 2 - ரிலீஸ் தேதி அறிவிப்பு!

டோண்ட் ப்ரீத் 2

டோண்ட் ப்ரீத் 2

ஒரு நல்ல செய்தி, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் டோண்ட் ப்ரீத் 2 இந்தியாவில் வெளியாகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஹாலிவுட்டின் வெற்றிப் படங்களுள் ஒன்றான டோண்ட் ப்ரீத்தின் இரண்டாம் பாகம் தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் பிராந்திய மொழிகளில் வெளியாகிறது. 

டோண்ட் ப்ரீத் 2016 இல் வெளியான ஹாரர் த்ரில்லர் திரைப்படம். திருடச் செல்லும் சில இளைஞர்கள் கண் தெரியாத வயதான நபடம் மாட்டிக் கொள்வதுதான் கதை. ஒவ்வொரு நொடியையும் திகிலில் உறைய வைத்திருந்தார் படத்தின் இயக்குனர். வயதான கண்  தெரியாத நபராக ஸ்டீபன் லாங் நடித்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உலக அளவில் படம் பட்டையை கிளப்பியதால், அதன் இரண்டாம் பாகத்தை எடுத்தனர். இதிலும் ஸ்டீபன் லாங்தான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முதல் பாகத்தின் கதை முழுக்க, பூட்டி வீட்டிற்குள் நடந்தது. இதில் எங்கு, எப்படி நம்மை பயமுறுத்தப் போகிறார்கள் என்று தெரியவில்லை.



Also read... கொரோனாவுக்கு முன்பும், பின்பும் அக்ஷய் குமார் படங்களின் வசூல் ஒரு பார்வை!

ஒரு நல்ல செய்தி, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் டோண்ட் ப்ரீத் 2 இந்தியாவில் வெளியாகிறது. செப்டம்பர் 17 படம் இந்தியாவுக்கு வருகிறது. திரையரங்கில் மட்டுமே வெளியீடு என்று கூறியிருக்கிறார்கள். சில வாரங்கள் பொறுத்து ஏதேனும் ஓடிடியிலும் வெளியாகலாம்

நொடிக்கு நொடி பயப்படுற மாதிரி ஒரு படம் பார்க்க விரும்புகிறவர்கள் செப்டம்பர் 17 டிக்கெட் எடுத்துப் போய் பயந்துவிட்டு வரலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: