இந்தியாவில் 1000 திரையரங்குகளில் வெளியாகும் ஹாலிவுட் படம்...!

டோண்ட் ப்ரீத் 2

ஜேம்ஸ் வான் இயக்கியிருக்கும் மலிக்னென்ட் திரைப்படம் சென்றவாரம் வெளியாகி நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் டோண்ட் ப்ரீத் இரண்டாம் பாகம் வெளியாகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா இரண்டாம் அலைக்குப் பின் திரையரங்குகளை ஹாலிவுட் படங்களே காப்பாற்றி வருகின்றன. அக்ஷய் குமார் நடித்த பெல் பாட்டம் வசூலித்ததைவிட ஷாங் - சி ஹாலிவுட் படம் இந்தியாவில் வசூலித்தது அதிகம். அதேபோல் எஃப் 9 படமும் கணிசமான வசூலை பெற்றுள்ளது.

சேட்டிலைட், டிஜிட்டில், ஆடியோ, ஓடிடி என பலவகைகளில் வருமானம் வருவதால் திரைப்பட தயாரிப்பாளர்கள் திரையரங்கு வெளியீட்டை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. அந்த அலட்சியத்தின் நடுவே கொடி நாட்டுகின்றன ஹாலிவுட் படங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2016 இல் வெளியாகி ஒலகம் முழுவதும் வரவேற்பை பெற்ற ஹாரர் த்ரில்லர் டோண்ட் ப்ரீத் திரைப்படம். ஸ்டீபன் லாங் நடித்திருந்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் செப்டம்பர் 17 இந்தியாவில் வெளியாகிறது. இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளிலும் படத்தை வெளியிடுகின்றனர். ஆயிரம் திரையரங்குகளுக்கு மேல் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதற்கேற்ப திரையரங்குகளும் கிடைத்திருப்பதாக தகவல்

Also read... திரையரங்கில் வெளியாகாத டிக்கிலோனா படத்துக்கு சக்சஸ் பார்ட்டி!

ஜேம்ஸ் வான் இயக்கியிருக்கும் மலிக்னென்ட் திரைப்படம் சென்றவாரம் வெளியாகி நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் டோண்ட் ப்ரீத் இரண்டாம் பாகம் வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து ஜங்கிங் க்ரூஸ், நோ டைம் டூ டை உள்பட ஏராளமான பிரமாண்ட படங்கள் வெளிவர உள்ளன. இந்த வருடம் திரையரங்கில் இந்தியப் படங்கள் சாதிப்பதைவிட ஹாலிவுட் படங்கள் வசூலிக்கும் என்பதே கள யதார்த்தமாக உள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published: