Don't Breathe 2: ஆகஸ்டில் மிரட்ட வருகிறது டோண்ட் ப்ரீத் 2!

டோண்ட் ப்ரீத் 2

2016-ல் வெளியான டோண்ட் ப்ரீத் ஹாலிவுட் படம் உலக அளவில் ஹாரர் பட ரசிகர்களை கலங்கடித்தது.

  • Share this:
    13 என்பது மேற்கத்திய நாடுகளில் சாத்தானின் எண். ஹோட்டல்களில் 12-க்குப் பிறகு 12ஏ தான் இருக்கும். 13-ஐ தவிர்த்து விடுவார்கள். நம்மூரில்கூட 13 ஆம் நம்பர் வீடு என்ற பெயரில் ஒரு பேய் படம் வெளியானது. ஆனால், டோண்ட் ப்ரெத் 2 போன்ற ஹாரர் படத்தை வெளியிட 13-ஐ விட பொருத்தமான தேதி இருக்க முடியாது. ஆம், ஆகஸ்ட் 13-ம் தேதி டோண்ட் ப்ரெத் 2 வெளியாகிறது.

    2016-ல் வெளியான டோண்ட் ப்ரெத் ஹாலிவுட் படம் உலக அளவில் ஹாரர் பட ரசிகர்களை கலங்கடித்தது. இத்தனைக்கும் சின்ன பட்ஜெட். அதிகமும் ஒரேயொரு வீடு. கண் தெரியாத முன்னாள் ராணுவ வீரரின் வீட்டில் ஆட்டையைப் போட மூன்று இளைஞர்கள் முயல்கிறார்கள். வீட்டிற்குள் நுழையும் அவர்களுக்கு அங்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. அவர்களுடன் படம் பார்க்கும் நாமும் கலங்கிப் போகிறோம். கண் தெரியாத வயதான ராணுவ வீரனாக வரும் ஸ்டீபன் லாங் (அவதாரில் வில்லனாக வருகிறவர்) தனது ஆக்ரோஷமான நடிப்பால் படத்தின் ஒவ்வொரு நொடியையும் பார்வையாளர்களை முள்ளின் மீது உட்கார வைத்தார். மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ஆகஸ்ட் 13 வெளியாகிறது.

    இரண்டாவது பாகத்திலும் ஸ்டீபன் லாங்கே நடித்துள்ளார். முதல் பாகத்தை இயக்கிய ஹங்கேரியன் இயக்குனர் Fede Álvarez க்கு பதில், Rodo Sayagues இந்த இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். இவரும் ஹங்கேரியைச் சேர்ந்தவர்தான்.Fede Álvarez இயக்கிய ஈவில் டெட் (2013), டோண்ட் ப்ரெத் படங்களின் கதாசிரியர் இவர். முதல்முறையாக டோண்ட் ப்ரெத் 2 மூலம் இயக்குனர் வாய்ப்பை பெற்றிருக்கிறார். ஈவில் டெட், டோண்ட் ப்ரெத் படங்களை தயாரித்த Sam Raimi இந்த இரண்டாம் பாகத்தையும் தயாரித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆஸ்திரேலியா, போர்ச்சுகல், ரஷ்யா போன்ற நாடுகளில் ஆகஸ்ட் 12 ஆம் தேதியும், யுகே, அயர்லாந்த், ஐஸ்லேண்ட், கனடா, துருக்கி, ஸ்வீடன் போன்ற நாடுகளில் ஆகஸ்ட் 13-ஆம் தேதியும், யுஎஸ், ஜெர்மனி, நெதர்லாந்த், பிரான்ஸ் முதலிய நாடுகளில் ஆகஸ்ட் 19-ஆம் தேதியும் டோண்ட் ப்ரேத் 2 வெளியாகிறது. இந்தியாவில் எப்போது வெளியாகும் என்பது இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: