Home /News /entertainment /

Don Review: படத்துக்குப் படம் மெருகேறும் சிவகார்த்திகேயன்!

Don Review: படத்துக்குப் படம் மெருகேறும் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன் டான்

சிவகார்த்திகேயன் டான்

சிவகார்த்திகேயனின் டான் படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    சிவகார்த்திகேயனின் டான் படத்தைப் பார்த்தவர்கள் தங்கள் விமர்சனங்களை ட்விட்டரில் தெரிவித்து வருகிறார்கள். அவற்றில் சிலவற்றை இங்கே பதிவிடுகிறோம்.

    லைகா புரொடக்‌ஷன்ஸ் - சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், SJ சூர்யா, சமுத்திரகனி, சூரி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “டான்”. டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான இப்படம் மீது, எதிர்பார்ப்புகள் எழத் தொடங்கின.

    இந்நிலையில் டான் திரைப்படம் இன்று பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. இதனை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே படத்தைப் பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் தங்கள் விமர்சனங்களை பகிர்ந்து வருகிறார்கள். அவற்றில் சிலவற்றை இங்கே குறிப்பிருகிறோம்.



    100 நாட்கள் ஓடுவதற்கு தகுதியான திரைப்படம்.



    முதல் பாதி மைக்செட் வீடியோவாகவும், இரண்டாம் பாதி மிஸ்டர் லோக்கல், மீசைய முறுக்கு போலிருப்பதாகவும் கூறியுள்ளார் இந்த பயனர்.



    100 சதவீத பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்தப் படம்.



    சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் மக்களின் இதயங்களை கவர்ந்திருக்கிறது.



    இந்த வருடத்தின் சிறந்த கோலிவுட் கமர்ஷியல் சினிமா.



    குடும்பத்துடன் ரசிக்க வேண்டிய படம். சிவகார்த்திகேயன் படத்துக்குப் படம் வலிமையாகிறார்.



    ரசிகர்களுடன் இணைந்து டான் படத்தைப் பார்த்த சிவகார்த்திகேயன்!

    நகைச்சுவை, பாடல்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான அனைத்து அம்சங்களுடன் கூடிய வணிக பொழுதுபோக்கு படம். கல்லூரி நாட்களின் இனிய நினைவுகளுக்கு மனம் திரும்புகிறது. வரும் நாட்களில் படம் வெற்றிகரமாக ஓடும்.





    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Sivakarthikeyan

    அடுத்த செய்தி