Home /News /entertainment /

Don Review: சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் எப்படி உள்ளது?

Don Review: சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் எப்படி உள்ளது?

சிவகார்த்திகேயன் டான்

சிவகார்த்திகேயன் டான்

படத்தின் நீளம் லேசான பின்னடைவு என்றாலும் நேரம் போவது தெரியாமல் அடுத்தடுத்து காட்சிகளை அடுக்கி உள்ள விதம் பலரையும் ரசிக்க செய்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று திரைக்கு வந்துள்ள டான் திரைப்படம் எப்படி உள்ளது என்பதை இங்கே குறிப்பிடுகிறோம்.

அட்லி உதவி இயக்குனரான சிபி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் எஸ் ஜே சூர்யா சமுத்திரக்கனி பிரியங்கா மோகன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து இன்று திரைக்கு வந்துள்ள டான் திரைப்படம், கல்லூரி கலாட்டா திரைப்படமாக மட்டுமல்லாமல் ரசிகர்களை திரையரங்கில் கண்ணீர் விட்டு அழ செய்யும் அப்பா-மகன் செண்டிமெண்ட் திரைப்படமாகவும் உருவாகி உள்ளது.

படத்தின் முதல் பாதி முழுக்க முழுக்க காமெடிக்கு என திட்டமிட்டு பல கலாட்டாக்களை படக்குழுவினர் அடுக்கி உள்ளனர். முதல் பாதியில் கடைசி பெஞ்ச் மாணவனான சிவகார்த்திகேயனுக்கும் கடைசி பெஞ்ச் மாணவனாக இருந்து பிரின்ஸ்பல் ஆக உயர்ந்து எஸ் ஜே சூர்யாகும் இடையே நடைபெறும் மோதல்கள் ரசிகர்களை சுவாரசியம் அடைய செய்கின்றன.

படத்துக்குப் படம் மெருகேறும் சிவகார்த்திகேயன்!

கல்லூரியில் சிவகார்த்திகேயன் செய்யும் கலாட்டாக்கள் முதல் பாதியை ரசிகர்கள் உற்சாகமாக கண்டுகளிக்க உதவியுள்ளன இரண்டாவது பாதியில் சமுத்திரக்கனி சிவகார்த்திகேயன் இடையே நடைபெறும் பாசப்போராட்டம் பார்க்கும் பல ரசிகர்களின் கண்கள் குளமாகுகின்றது. படத்தின் நீளம் லேசான பின்னடைவு என்றாலும் நேரம் போவது தெரியாமல் அடுத்தடுத்து காட்சிகளை அடுக்கி உள்ள விதம் பலரையும் ரசிக்க செய்துள்ளது.

ரசிகர்களுடன் இணைந்து டான் படத்தைப் பார்த்த சிவகார்த்திகேயன்!

இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களை தொடர்ந்து கேலி செய்து வரும் நிலையில் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு நம்பிக்கை தரும் திரைப்படமாகவும் இந்த படம் அமைந்துள்ளது. படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு படம் முழுக்க கொண்டாட்டம் ஏற்படுத்தும் இசையை வழங்கி உள்ள அனிருத் படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளார். ஒட்டுமொத்தமாக சிவகார்த்திகேயன் திரைவாழ்க்கையில் மற்றும் ஒரு வெற்றித் திரைப்படமாக மாறியுள்ள டான் திரைப்படம் வார இறுதியில் வசூல் வேட்டையாடும் என்பதுல் சந்தேகம் இல்லை



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Sivakarthikeyan

அடுத்த செய்தி