சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் படத்தின் சென்சார் சான்றிதழ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. படம் 13-ம்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சிவகார்த்திகேயன், எஸ்.ஜே. சூர்யா, பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ள டான் படத்தை அட்லீயிடம் உதவி இயக்குனராக இருந்த சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். அனிருத் இசையில் படத்தில் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
இதேபோன்று நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட டான் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் படத்திற்கு ‘யு’ சான்றிதழை சென்சார் போர்டு அளித்துள்ளது.
இதையும் படிங்க - கே.ஜி.எஃப். பட நடிகர் மோகன் ஜுனேஜா காலமானார்... ரசிகர்கள், திரைத்துறையினர் இரங்கல்
இந்தப் படத்தை லைகா புரொடக்சன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. தமிழகத்தில் டான் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.
ட்ரெய்லர் வெளியீட்டையொட்டி, நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் திரைத்துறையினர் பலர் கலந்து கொண்டு டான் படம் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதில் பங்கேற்று பேசிய உதயநிதி ஸ்டாலின், தமிழ் சினிமாவில் தற்போது சிவகார்த்திகேயன், அனிருத் என 2 டான்கள் இருப்பதாக பாராட்டியிருந்தார்.
இதையும் படிங்க - நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் நயன்தாரா படம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு
டான் திரைப்படம் வரும் வெள்ளியன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. தற்போது, தமிழக திரையரங்குகளில் பெரும்பாலும் காத்துவாக்குல ரெண்டு காதல், கேஜிஎஃப் 2 மற்றும் பீஸ்ட் ஆகிய படங்கள் மட்டுமே ஓடிக்கொண்டிருக்கின்றன.
அடுத்த பெரிய வெளியீடு என்ற அடிப்படையில் கமலின் விக்ரம் அடுத்த மாதம் வெளியாகிறது. இதனால் படம் ரசிகர்களை திருப்தி அடையச் செய்தால், டான் நல்ல வசூலை எட்டும் என்று சினிமா வர்த்தக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
படத்தின் இயக்குனரான சிபி சக்கரவர்த்திக்கு இது முதல்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.