• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • கலைஞரின் நெஞ்சுக்கு நீதிக்கு நியாயம் செய்யுமா உதயநிதி படம்?

கலைஞரின் நெஞ்சுக்கு நீதிக்கு நியாயம் செய்யுமா உதயநிதி படம்?

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதியின் இந்தப் படத்தை ஸீ ஸ்டுடியோஸுடன் இணைந்து போனி கபூர் தமிழில் ரீமேக் செய்கிறார்.

  • Share this:
    மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வராலாறு நெஞ்சுக்கு நீதி. மொத்தம் ஆறு பாகங்களை கொண்டது. நெஞ்சுக்கு நீதி என்றால் கருணாநிதியின் பெயரே அனைவருக்கும் நினைவுவரும். அந்தப் பெயரை தனது படத்துக்கு வைத்துக் கொண்டிருக்கிறார் உதயநிதி.

    இந்தியில் வெளியான ஆர்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி நடித்து வருகிறார். இந்தப் படத்துக்குதான் நெஞ்சுக்கு நீதி என்று பெயர் வைத்துள்ளனர். ஆர்டிகிள் 15, 2019-ல் வெளிவந்த திரைப்படம். அனுபவ் சின்ஹா இதன் கதை திரைக்கதை எழுதி இயக்கியதோடு தயாரித்தும் இருந்தார், எடிட்டிங்கும் அவரே. கதையை உடன் எழுதியவர் கௌரவ் சொலான்கி. ஆயுஷ்மான் குரானா, நாசர், இஷா தல்வார், சயானி குப்தா உள்பட பலர் நடித்திருந்தனர்.

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 15-வது ஆர்டிகிள், சாதி, மத, இன, மொழி, பால், பிறந்த இடம் ஆகிய வித்தியாசங்களை வைத்து பாகுபாடு காட்டக் கூடாது என்கிறது. சாதி, மத ரீதியான அவதூறு, வன்முறைகள் இதன் கீழ் வரும். இதனை மையப்படுத்திய கதை என்பதால் இதற்கு ஆர்டிகிள் 15 என பெயர் வைத்திருந்தனர். சாதிய படிநிலையை பேசிய என்ஹெச் 10 படத்தைவிட பல மடங்கு துணிச்சலான முயற்சி இந்தப் படம். இதனை தணிக்கைக்குழு அனுமதித்ததே ஆச்சரியம்.



    இந்தப் படத்தை ஸீ ஸ்டுடியோஸுடன் இணைந்து போனி கபூர் தமிழில் ரீமேக் செய்கிறார். உதயநிதி, ஆயுஷ்மான் குரானா நடித்த வேடத்தை தமிழில் செய்கிறார். அருண்ராஜா காமராஜ் இயக்கம். இந்தியில் இருப்பதை அப்படியே தழுவி எடுத்தால் படம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையையும், வரவேற்பையும் பெற வாய்ப்புள்ளது. ஆனால், அச்சு அசலாக அப்படியே பிரதி செய்வார்களா இல்லை வசனங்களில் மாற்றம் செய்வார்களா என்பது இன்னும் சந்தேகத்துக்குரியதாகவே உள்ளது.

    கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி இந்தப் படத்துக்கு பொருத்தமான தலைப்பு. படமும் அதற்கு நீதி செய்ய வேண்டும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: