சுஷாந்த் மரணித்து கிட்டத்தட்ட 2.5 வருடங்களுக்கு மேலாகிறது. ஆனால் அவரது மரணம் கொலையா ? தற்கொலையா? என்ற கேள்விக்கு இதுவரை விடை தெரிந்தபாடில்லை. நாளுக்கு நாள் அவரது மரணம் குறித்து சர்ச்சைகள் தொடர்ந்துகொண்டே தான் இருக்கின்றன.சமீபத்தில் கூட ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவை சேர்ந்த ராகுல் ஷெவாலே நாடாளுமன்றத்தில், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தில் ஆதித்ய தாக்கரேவுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தார். ஆதித்ய தாக்கரேவிடமிருந்து 44 முறைகள் ரியாவுக்கு போன் சென்றுள்ளதாக பீகார் காவல்துறையில் தெரிவித்துள்ளதாக ராகுல் ஷெவாலே குறிப்பிட்டிருந்தார்.
இந்த சர்ச்சை அடங்கும் முன் சுஷாந்த்துக்கு உடற்கூராய்வு செய்த ரூப்குமார் ஷா என்ற மருத்துவர் சுஷாந்த் தற்கொலை செய்யவில்லை கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற பரபரப்பு தகவலை வெளியிட்டிருக்கிறார். சமீபத்தில் செய்தி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இதனை குறிப்பிட்டிருக்கிறார். அவரது பேட்டியில் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்தபொழுது கூப்பர் மருத்துவமனைக்கு 5 இறந்த உடல்கள் வந்தது. அதில் ஒன்று சுஷாந்த்தினுடையது. அவரது உடலில் நிறைய மார்க்குள் இருந்தன. குறிப்பாக அவரது கழுத்தில் 2 முதல் 3 மார்க்குகள் இருந்தன.
இதனை பார்த்தபோது என் உயர் அதிகாரியை அழைத்து இது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை, கொலையாக இருக்கலாம் என்றேன். அப்போது முடிந்தவரை சில புகைப்படங்கள் எடுத்து உடலை காவல்துறையினரிடம் ஒப்படையுங்கள் என்றார். மேலும் விதிகளின் படி உடற்கூராய்வை முறையாக வீடியோ பதிவு செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ரூப்குமார் ஷாவின் பேட்டி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது தகவலின் படி சிபிஐ விசாரித்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சுஷாந்த் சிங்கின் தந்தை கேகே சிங், நடிகை ரியா சக்ரபோர்த்தி தனது மகனை மன ரீதியாக துன்புறுத்தினார் என்றும் போதை மருந்து கொடுத்தார் என்றும் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bollywood, Sushant Singh Rajput