• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இரு ஓடிடி தளங்களில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம்!

இரு ஓடிடி தளங்களில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம்!

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

டாக்டர் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியது. அவர்கள் டாக்டரை தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்புகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் இரு ஓடிடி தளங்களில் விரைவில் வெளியாக உள்ளது.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் டாக்டர் 3 வாரங்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கொரோனா இரண்டாம் அலைக்குப் பின் வெளியான படங்களில் முதல் மற்றும் ஒரே ப்ளாக் பஸ்டர் திரைப்படம் டாக்டர். இதுவரை உலக அளவில் 90 கோடிகளை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

டாக்டர் திரைப்படம் யுஎஸ் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்றது. படத்தின் பிளாக் க்யூமர் ரசிகர்களை கவர்ந்ததால் குழந்தைகளுடன் குடும்பமாக வந்துப் பார்க்கிறார்கள். நாளை கேரளாவில் படம் வெளியாகிறது. அங்கும் படம் நல்ல வசூலை பெறும் என கேரள விநியோகஸ்தர் தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

டாக்டர் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியது. அவர்கள் டாக்டரை தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்புகின்றனர். மறுநாள் நவம்பர் 5 ஆம் தேதி டாக்டர் நெட்பிளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் இரு ஓடிடி தளங்களிலும் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு படம் திரையரங்கில் வெளியாகி நான்கு வாரங்கள் கழிந்த பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் நிர்ப்பந்தித்து வருகின்றனர். டாக்டர் இந்த மாதம் 9 ஆம் தேதி வெளியானது. நவம்பர் 5 என வரும்போது நான்கு வாரங்களாகும்.

சிவகார்த்திகேயன் ரசிகர்கள் நவம்பர் 4 தொலைக்காட்சியிலும், அதற்கு அடுத்த நாள் ஓடிடியிலும் டாக்டரைப் பார்த்து பரவசமடையலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: