Home /News /entertainment /

அப்பா ராஜசேகர் மகள் ஷிவானி இணைந்து நடிக்கும் சேகர்!

அப்பா ராஜசேகர் மகள் ஷிவானி இணைந்து நடிக்கும் சேகர்!

மகளுடன் ராஜசேகர்

மகளுடன் ராஜசேகர்

இந்தப் படத்தை ஜீவிதா இயக்க, ஷிவானி இதில் ராஜசேகரின் மகளாக நடிக்கிறார். அதாவது அப்பாவும், மகளும் அப்பாவும் மகளுமாகவே படத்தில் வருகிறார்கள்.

முப்பது வருடங்களுக்கு முன் சினிமா ரசிகர்களிடையே டாக்டர் ராஜசேகர் என்ற பெயர் பிரபலம். அவர் நடித்த தெலுங்குப் படம், இது தான்டா போலீஸ் என்ற பெயரில் தமிழில் வெளியாகி உலக ஓட்டம் ஓடியது. விஜயசாந்திக்கு ஒரு வைஜெயந்தி ஐபிஎஸ் போல டாக்டர் ராஜசேகருக்கு இந்தப் படம் அமைந்தது. அதன் பிறகு அவர் நடித்த போலீஸ் படங்கள் வரிசையாக தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.

டாக்டர் ராஜசேகரின் அலை ஓய்ந்து பல வருடங்கள் ஆனாலும் அவ்வப்போது அவர் நாயகனாக நடிக்கவே செய்கிறார். அவரது மனைவி நடிகை ஜீவிதா, படங்கள் தயாரிப்பது, இயக்குவது என அவரும் சினிமாவை விடவில்லை. கலையுலக தம்பதிகளின் வாரிசுகள் மட்டும் சினிமாவிலிருந்து விலகியா இருப்பார்கள்? இவர்களின் மூத்த மகள் சிவாத்மிகா நடிப்பில் சமீபத்தில் ஆனந்தம் விளையாடும் வீடு படம் வெளியானது. இளைய மகள் ஷிவானி, கே.வி.குகன் தெலுங்கில் இயக்கிய WWW திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார். சமீபத்தில் ஓடிடியில் வெளியான அன்பறிவு படத்திலும் அவர் தான் நாயகியாக நடித்திருந்தார்.

தற்போது டாக்டர் ராஜசேகர், சேகர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது 2018 மலையாளத்தில் வெளியான ஜோசப் படத்தின் தெலுங்கு ரீமேக். இந்தப் படத்தை ஜீவிதா இயக்க, ஷிவானி இதில் ராஜசேகரின் மகளாக நடிக்கிறார். அதாவது அப்பாவும், மகளும் அப்பாவும் மகளுமாகவே படத்தில் வருகிறார்கள்.

ராஜா சாருக்கு இது தெரியாதா? இளையராஜாவை விமர்சிக்கும் சின்மயி

வரும் பிப்ரவரி 4 ராஜசேகரின் 60 வது பிறந்தநாள். அன்று படத்தை திரையரங்கில் வெளியிட தீர்மானித்திருக்கிறார்கள்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

அடுத்த செய்தி