• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 25 கோடிக்கு டாக்டர் படத்தை வாங்கிய சன் தொலைக்காட்சி...!

25 கோடிக்கு டாக்டர் படத்தை வாங்கிய சன் தொலைக்காட்சி...!

டாக்டர் படம்

டாக்டர் படம்

உடல் உறுப்புகளை திருடி விற்கும் கதைப்பின்னியில் இந்தப் படத்தை நெல்சன் எடுத்துள்ளார். ப்ரியங்கா அருள் மோகன் நாயகி. யோகி பாபு நகைச்சுவை ஏரியாவை கவனிக்க, வில்லனாக வினய் நடித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நாளை வெளியாகும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை முறையே சன் தொலைக்காட்சி, சன் நெக்ஸ்ட் ஆகியவை கைப்பற்றியுள்ளன.

கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சனின் இரண்டாவது படம் டாக்டர். சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் இந்தப் படம் பல மாதங்கள் முன்பே வெளியாகியிருக்க வேண்டும். கொரோனா இரண்டாம் அலை காரணமாக வெளியீடு தள்ளிப்போனது.

படத்தை ஓடிடியில் வெளியிட தயாரிப்பாளர்கள் முயற்சி செய்தனர். அதற்கு ரசிகர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவவே, ஓடிடி திட்டத்தை கைவிட்டு நாளை படத்தை திரையரங்கில் வெளியிடுகின்றனர்

உடல் உறுப்புகளை திருடி விற்கும் கதைப்பின்னியில் இந்தப் படத்தை நெல்சன் எடுத்துள்ளார். ப்ரியங்கா அருள் மோகன் நாயகி. யோகி பாபு நகைச்சுவை ஏரியாவை கவனிக்க, வில்லனாக வினய் நடித்துள்ளார்.

அனிருத் இசை. நாளை வெளியாகும் இந்தப் படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை 25 கோடிகளுக்கு சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. இதில் சேட்டிலைட் உரிமை 12 கோடிக்கும், டிஜிட்டல் உரிமை 13 கோடிகளுக்கும் விற்கப்பட்டிருப்பதாக தெரிகிறது

ஓடிடி வந்த பிறகு படங்களை வாங்க கடும் போட்டி நிலவுகிறது. நேரடியாக ஓடிடியில் படத்தை வெளியிட மட்டுமின்றி, திரையரங்கில் வெளியான பிறகு எந்த ஓடிடியில் படம் வெளியாகும் என்பதிலும் போட்டி நடக்கிறது.

Also read... Bhramam Review - பிருத்விராஜின் ப்ரம்மம் எப்படி இருக்கிறது?

கர்ணன் படம் திரையரங்கில் வெளியான பின் ஓடிடியில் வெளியாகி அதிக பார்வையாளர்களை சென்றடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் சன் தொலைக்காட்சியும் முனைப்பாக உள்ளது

டாக்டர் படத்தை தீபாவளியையொட்டி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும் ஆச்சரியமில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: