ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Chinmayi: கிளப்ஹவுஸில் மருத்துவரின் சர்ச்சை பேச்சு: மன்னிப்பை ஏற்க மறுத்த சின்மயி

Chinmayi: கிளப்ஹவுஸில் மருத்துவரின் சர்ச்சை பேச்சு: மன்னிப்பை ஏற்க மறுத்த சின்மயி

சின்மயி

சின்மயி

மருத்துவர் அரவிந்த் ராஜ் மீது சட்டரீதியான புகார் அளிக்க உள்ளதாக பாடகி சின்மயி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பாடகி சின்மயியை சமூகவலைதளங்களில் மருத்துவர் ஒருவர் தரக்குறைவாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

  சமீபமாக மக்கள் அனைவரும் குரல் வழியாக பேசிக்கொள்ளும் கிளப் ஹவுஸ் எனப்படும் சமூக வலைதளம் பரவலாகி வருகிறது. தொடர்ச்சியாக சின்மயி பற்றியும் அவர் வைரமுத்து மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டு பற்றியும் இந்த வலைத்தளத்தில் அதிகமாக பேசப்பட்டு வந்தது.

  இந்த நிலையில் நேற்று ஒரு குழுவில் பேசிய மருத்துவர் அரவிந்தராஜ், பாடகி சின்மயி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும், அவர் எந்த மனநல ஆலோசகரிடம் ஆலோசனை பெறுகிறார் என்றும் அவருடைய மன நலன் பற்றியும் தனக்கு தெரியும் எனவும் பேசினார்.

  இதனைத் தொடர்ந்து அந்த குழுவில் பாடகி சின்மயியும் இணைக்கப்பட்டார். தொடர்ந்து பேச்சுவார்த்தையில் அவர்களுக்குள் வாக்குவாதம் வளர்ந்தது. தன்னுடைய தனிப்பட்ட விவகாரங்கள் குறித்து மருத்துவர் அரவிந்தராஜ் சமூகவலைத்தளங்களில் பேசுவது ஏன் என்று சின்மயி கேள்வி எழுப்பினார். அதனைத் தொடர்ந்து மருத்துவர் அரவிந்தராஜ் குழுவில் இருந்து வெளியேறினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த நிலையில் மருத்துவர் அரவிந்த் ராஜ் மீது சட்டரீதியான புகார் அளிக்க உள்ளதாக பாடகி சின்மயி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் மருத்துவர் அரவிந்த் ராஜ் பாடகியின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டதாகவும் அதனை அவர் எடுக்காததால் அவருடைய தாயிடம் 20 நிமிடங்கள் பேசி மன்னிப்பு கேட்டதாகவும் பேஸ்புக்கில் கூறியிருக்கிறார். இரவு மது அருந்திவிட்டு இதுபோன்ற தவறாக பேசி விட்டதாக ஒரு விளக்கம் அளித்திருக்கிறார்.

  ஆனாலும் அதனை ஏற்றுக்கொள்ளாத சின்மயி இது குறித்து காவல்துறையிடம் போர் அளிக்கப்போவது என திட்டவட்டமாக இருக்கிறார். மேலும் மருத்துவர் அரவிந்த் ராஜுக்கு தன்னுடைய தொலைபேசி எண்ணை கொடுத்தவர்கள் மீதும் சின்மயி கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

  தற்போது பலரிடம் தன்னுடைய தனிப்பட்ட எண் பரவி வருவதால் அதனையும் மாற்ற வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப் பட்டிருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Shalini C
  First published:

  Tags: Chinmayi