Home /News /entertainment /

சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் இசையில் உருவான ‘டாக்டர்’ பட பாடல்

சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் இசையில் உருவான ‘டாக்டர்’ பட பாடல்

சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் இசையில் உருவான ‘டாக்டர்’ பட பாடல்

டாக்டர் படத்தின் ‘செல்லம்மா’ என்ற முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ஹீரோ. இந்தப் படத்தை அடுத்து கோலமாவு கோகிலா இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் மற்றும் அயலான் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.

    டாக்டர் படத்தில் ப்ரியங்கா அருள் நாயகியாக நடிக்கிறார். இது அவருக்கு முதல் தமிழ்ப்படம். மேலும் வினய், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், கோவா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டிய சூழ்நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. செல்லம்மா என்ற இந்தப் பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.



    பாடல் வெளியான சில நிமிடங்களில் இந்திய அளவிலான ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #Chellamma என்ற ஹேஷ்டேக்கை இடம்பெறச் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர் சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகர்கள்.
    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: Doctor, Sivakarthikeyan

    அடுத்த செய்தி