• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • திரையுலகினரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய டாக்டர் - அரண்மனை 3 வசூல்!

திரையுலகினரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய டாக்டர் - அரண்மனை 3 வசூல்!

சிவகார்த்திகேயன் - ஆர்யா

சிவகார்த்திகேயன் - ஆர்யா

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த டாக்டர் திரைப்படம் தமிழகத்தில் 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

  • Share this:
    அண்மைக்காலமாக திரைப்படங்களின் வசூல் நிலவரம் மோசமான நிலையை எட்டியிருந்த நிலையில், தற்போது டாக்டர், அரண்மனை 3 ஆகிய திரைப்படங்கள் நல்ல வசூலை ஈட்டியுள்ளது திரையுலகினரை உற்சாகம் அடைய செய்துள்ளது.

    சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த டாக்டர் திரைப்படம் ஏறத்தாழ பத்து நாட்களை கடந்தும், திரையரங்கம் நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 50 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டியுள்ள டாக்டர் திரைப்படம், வெளிநாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா என ஒட்டுமொத்தமாக 60 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

    50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ள போதும், டாக்டர் திரைப்படம் நிகழ்த்தியுள்ள இந்த இமாலய வசூல் சாதனை பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. பல திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு டிக்கெட் வழங்கப்பட்டு, தயாரிப்பாளருக்கு 50 சதவீத இருக்கைகள் மட்டுமே கணக்கிடப்பட்டுருக்கக் கூடும் என்ற நிலையிலேயே, தமிழக அளவில் டாக்டர் திரைப்படம் 50 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    இதேபோல சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா, ராசி கண்ணா ஆகியோர் நடிப்பில் வெளியான அரண்மனை திரைப்படத்தின், மூன்றாவது பாகம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதும், வசூல் ரீதியில் ஆரோக்கியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. வெளியாகி நான்கு நாட்களை கடந்துள்ள அரண்மனை திரைப்படம், இதுவரை தமிழக அளவில் 15 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. ஒட்டுமொத்தமாக 20 கோடி வரை இந்த திரைப்படம் வசூலித்து இருக்கும் என கருதப்படுகிறது.

    மேலும் படிக்க பாவாடை தாவணியில் கலக்கும் ரோஜா... வைரலாகும் படங்கள்!

    அண்மைக்காலமாக இறங்கு முகத்தில் இருந்த திரையரங்க வசூல் மீண்டும் ஆரோக்கியமான பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளது, திரையரங்க உரிமையாளர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது. எதிர்வரும் தீபாவளி தினத்தில் அண்ணாத்த திரைப்படம் வெளியாவதால், திரையரங்க வசூல் மேலும் உயரும் என நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: