ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

தம்பி உங்க கல்யாணம் எப்ப? படாரென கேட்ட பாட்டி.. நண்பனை வைத்து சமாளித்த விஷால்!

தம்பி உங்க கல்யாணம் எப்ப? படாரென கேட்ட பாட்டி.. நண்பனை வைத்து சமாளித்த விஷால்!

நடிகர் விஷால்

நடிகர் விஷால்

Actor Vishal | விஷாலிடம், ஒரு மூதாட்டி, “தம்பி உங்க கல்யாணம் எப்ப? நல்ல மனசு இருக்கு சீக்கிரமா கல்யாணம் தேதி சொல்லுங்க” என ஆனந்த கண்ணீரில் கேட்டார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  சென்னை அடுத்த மாத்தூரில் தனியார் பள்ளி மைதானத்தில் 11 ஏழை ஜோடிகளுக்கு நடிகர் விஷால் திருமணம் செய்து வைத்தார். 11 ஏழை ஜோடிகளும் ஏற்கனவே காதல் செய்து வந்துள்ளனர். அதற்கு இரு வீட்டாரும் ஒப்புதல் அளித்ததால் விஷால் நற்பணி மன்றம் மூலம் திருமணம் இன்று நடைபெற்றது.

  இதற்கு நடிகர் விஷால் தலைமையேற்று, தாலியை மும்மத இறைவனை வேண்டி தொண்டு வணங்கி தங்க தாலியை மனமக்களுக்கு எடுத்து கொடுத்தார். மணமக்கள் விஷால் ரசிகர்களின் ஆரவாரத்துடன் தாலியை கட்டினர். இதற்கு நடிகர் விஷால் பாரபட்சம் பாராமல் அனைவருக்கும் அச்சதை தூவி ஆசிர்வாதம் செய்தார்.

  மேலும் மணமக்களை வாழ்த்த ரசிகளுக்கும் அச்சதையை வழங்கினார். மணமக்கள் திருமணம் முடிந்ததும் மணமேடையில் விழுந்து ஆசிர்வாதம் வழங்கிய பின், விஷாலும் மேடையில் விழுந்து கும்பிட்டார்.

  இதையும் படிங்க : த்ரிஷாவுக்கு என்னாச்சு... அவர் பகிர்ந்த புகைப்படத்தால் ரசிகர்கள் சோகம்..!

  இதனைத்தொடர்ந்து ரசிகர் மன்றம் சார்பில் சிறப்பாக நற்பணிகளை செய்து வரும் ரசிகர்களுக்கு தங்க செயின், மோதிரங்களையும் வழங்கி, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். நடிகர் விஷாலை காண தூய்மை பணியாளர்கள் வருகை தந்தனர்.

  இதனையறிந்த விஷால், தூய்மை பணியாளர்களை மேடைக்கு அழைத்து அவர்களிடம் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டு, சால்வை அணிவித்தார் இதனால், உற்சாக மிகுதியில் பெண் பணியாளர்கள் கூச்சலிட்டனர்.

  அப்போது, திருமண மேடையில் இருந்த விஷாலிடம், ஒரு மூதாட்டி, “தம்பி உங்க கல்யாணம் எப்ப? நல்ல மனசு இருக்கு சீக்கிரமா கல்யாணம் தேதி சொல்லுங்க” என ஆனந்த கண்ணீரில் கேட்டார்.

  உடனே அந்த பாட்டிக்கு, நடிகர் விஷால் நண்பனின் சௌந்திரராஜன், “இந்த கேள்விக்கு நான் பதிலளிக்கிறேன்” என கூறி, நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

  அதில் பல பிரச்சனைகள் இருப்பதால் அதனை கட்டி முடித்து, விரைவில் பத்திரிக்கை வரும் என தெரிவித்தார். பின்னர், ரசிகர்களின் குழந்தைகளை மேடைக்கு வரவழைத்து நடிகர் விஷால் தனது மடியில் அமர்த்தி கொஞ்சி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

  செய்தியாளர் : அசோக்குமார் - சென்னை

  Published by:Karthi K
  First published:

  Tags: Actor vishal, Cinema