Home /News /entertainment /

வலிமை தெலுங்குப் பதிப்பின் பெயர் என்ன தெரியுமா?

வலிமை தெலுங்குப் பதிப்பின் பெயர் என்ன தெரியுமா?

வலிமை

வலிமை

Valimai Release Date : அஜித்தின் வலிமை தமிழில் வெளியாகும் அதேநாள் தெலுங்கிலும் வெளியாகிறது. தெலுங்குப் பதிப்புக்கான பெயரை அறிவித்துள்ளனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் நடிப்பில் வலிமை வெளியாகிறது. இதற்கு முன் வெளியான அஜித்தின் நேர் கொண்ட பார்வை அஜித் ரசிகர்களுக்கான படம் என்று சொல்ல முடியாது. கதையை மையப்படுத்திய படம் அது. அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஆக்ஷன், சென்டிமெண்ட் அனைத்தும் நிறைந்த ஜனரஞ்சக படமாக வலிமை வெளியாகிறது.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத் வலிமையை இயக்கியிருப்பதால் படத்தின் மீது அனைத்துத் தரப்பினரும் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர். முக்கியமாக படத்தில் ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக வந்திருப்பதாக உள்வட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிசம்பர் 17 வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் புஷ்பா, ஜனவரி 7 வெளியாகவிருக்கும் ஆர்ஆர்ஆர் ஆகிய இரு படங்களும் சண்டைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்கள். அந்த தெலுங்குப் படங்களுக்கு சவால்விடும் வகையில் வலிமை இருக்கும் என்பது ரசிகர்களின் நம்பிக்கை.

also read : ’அன்பே வா’ சீரியல் பூமிகாவா இது! செம்ம மாடர்னா இருக்காங்களே..

வலிமை ஜனவரி 13 வெளியாவதாக அறிவித்துள்ளனர். அதேதேதியில் வலிமையின் தெலுங்குப் பதிப்பு ஆந்திரா, தெலுங்கானாவில் வெளியாகிறது. தெலுங்குப் பதிப்புக்கு பலம் என்று பெயர் வைத்துள்ளனர். ஜனவரியில் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர், பவன் கல்யாணின் பீம்ல நாயக், பிரபாஸின் ராதே ஷ்யாம் என நேரடித் தெலுங்குப் படங்கள் மூன்று வெளியாகின்றன. இவற்றுக்கு திரையரங்குகள் கிடைப்பதே கடினம். இந்த போட்டிக்கு நடுவில் அஜித்தின் பலம் தன்னை நிரூபிக்குமா?
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Actor Ajith, Valimai

அடுத்த செய்தி