• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • KS Ravi Kumar: கே.எஸ்.ரவிக்குமாரின் கூகுள் குட்டப்பா எந்தப் படத்தின் ரீமேக் தெரியுமா?

KS Ravi Kumar: கே.எஸ்.ரவிக்குமாரின் கூகுள் குட்டப்பா எந்தப் படத்தின் ரீமேக் தெரியுமா?

தனது அசோஸியேட்களை இயக்குனராகும் பொருட்டு கூகுள் குட்டப்பன் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்கிறார்.

  • Share this:
    கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் சபரி - சரவணன் இணைந்து இயக்கும் கூகுள் குட்டப்பா படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை மாலை ஆறு மணிக்கு வெளியாகிறது. இதுவொரு ரீமேக் படம்.

    கே.எஸ்.ரவிக்குமார் கடைசியாக பாலகிருஷ்ணா நடிப்பில் ரூலர் என்ற தெலுங்குப் படத்தை இயக்கினார். 2019-ல் இது வெளியானது. அதற்குமுன் அவர் இயக்கியது 2018-ல் வெளிவந்த ஜெய் சிம்ஹா. அதுவும் பாலகிருஷ்ணா நடித்த தெலுங்குப் படம். அதற்கு முன்னால், 2016-ல் கிச்சா சுதீப்பை வைத்து இயக்கிய கன்னடப்படம். அது தமிழில், முடிஞ்சா இவனப் புடி என்ற பெயரில் வெளியானது. அவர் நேரடியாக தமிழில் இயக்கிய கடைசிப்படம், 2014-ல் வெளியான லிங்கா. கதை எதுவும் அமையாததால் தமிழில் படம் இயக்குவதை தள்ளிப் போட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது தயாரிப்பில் தமிழில் ஒரு படம் தயாராகியுள்ளது. படத்தின் பெயர் கூகுள் குட்டப்பன்.

    KS Ravikumar, Google Kuttappan, ks ravikumar, ks ravikumar Google Kuttappan, ks ravikumar movie, google kuttappan movie, ks ravikumar movies, கே.எஸ்.ரவிக்குமார், கே.எஸ்.ரவிக்குமார் கூகுள் குட்டப்பன், கே.எஸ்.ரவிக்குமார் கூகுள் குட்டப்பன்
    கூகுள் குட்டப்பா


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தப் படத்தை சபரி - சரவணன் இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர். இவர்கள் இருவரும் கே.எஸ்.ரவிக்குமாரிடம் நீண்டகாலமாக அசோஸியேட்டாக பணிபுரிகிறவர்கள். அவருக்காக கதை கேட்கிறவர்கள். இதில் சபரி கே.எஸ்.ரவிக்குமாரின் உறவினரும்கூட. தனது அசோஸியேட்களை இயக்குனராகும் பொருட்டு கூகுள் குட்டப்பன் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்கிறார்.

    மலையாளத்தில் 2019-ல் வெளியான திரைப்படம் ஆன்ட்ராயிடு குஞ்சப்பன் வெர்சன் 5.25. சௌபின் ஷகிர், சுராஜ் வெஞ்சாரமூடு நடிப்பில் ரதீஷ் பாலகிருஷ்ணன் பொதுவாள் இயக்கிய இந்தப் படத்தின் தழுவலே கூகுள் குட்டப்பனாக தமிழில் தயாராகியுள்ளது. நாளை இதன் முதல் பார்வையை மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: