Home /News /entertainment /

பாரதிராஜா சிகிச்சை தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்… மகன் மனோஜ் வேண்டுகோள்

பாரதிராஜா சிகிச்சை தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்… மகன் மனோஜ் வேண்டுகோள்

பாரதி ராஜா

பாரதி ராஜா

பாரதி ராஜாவுக்கு ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பு சரி செய்யப்பட்டு விட்டதாகவும் இனி பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பாரதி ராஜாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று அவரது மகன் மனோஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனரான இயக்குனர் இமயம் பாரதி ராஜாவுக்கு சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வயது முதிர்வு மற்றும் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்ட அவர் சென்னை தனியார் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இதில் முன்னேற்றம் ஏற்பட்ட  நிலையில் நேற்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் தந்தையின் உடல் நிலை குறித்து மகன் மனோஜ் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-

    அப்பாவின் உடல்நிலை ஆரோக்கியமாக உள்ளது. பழைய பாரதி ராஜாவை பார்க்கும் அளவுக்கு அவரது உடல் நிலை நன்றாக இருக்கிறது. பணத்திற்கு வழியின்றி அப்பா மருத்துவமனையில் இருப்பதாக தவறான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தன.

    பாரதிராஜாவின் இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்…

    தயவு செய்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம். என்னுடைய சொந்த பணத்தில் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். அப்பாவுக்கு எல்லாமே சினிமாதான். அவர் மருத்துவமனையில் இருப்பதால் அவர் நடித்து வந்த சில படங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 81 வயதாகும் பாரதி ராஜா இளைஞரைப் போன்று ஆடையணிந்து உற்சாகத்துடன் பல்வேறு சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    எப்படி இருக்கிறது பாரதிராஜாவின் உடல்நிலை? முதல்வருடன் சென்று சந்தித்த பின்னர் வைரமுத்து விளக்கம்

    தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் அவருக்கு தாத்தாவாக நடித்து ரசிகர்களை ஈர்த்தார் பாரதி ராஜா.  அவருக்கு ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பு சரி செய்யப்பட்டு விட்டதாகவும் இனி பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
    Published by:Musthak
    First published:

    Tags: Bharathiraja

    அடுத்த செய்தி