இயக்குனர் விக்னேஷ் சிவன் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனம் செய்ய வந்திருந்தார். அப்போது நியூஸ் 18 தமிழுக்கு அவர் அளித்த சிறப்பு நேர்காணலில் கூறியதாவது-
ஆண்டுக்கு 2,3 முறை சபரிமலைக்கு வர முயற்சி எடுப்பேன். 2019 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இங்கு வந்தேன். அதன்பின்னர் கொரோனா ஆரம்பித்ததால் வரவில்லை. சிறு வயதிலேயே எனது அப்பாவுடன் சபரி மலைக்கு வருவேன். இப்போது அப்பா இல்லை. அவருக்காகவும் சேர்த்து தனியாக வருகிறேன்.
ஒரு கோயிலுடன் மற்ற கோயிலை ஒப்பிடக் கூடாது. ஒவ்வொரு கோயிலும், தனித்துவம் மிக்கது. திருப்பதி போனால் ஒருவிதமாக உணர முடியும். சபரி மலைக்கு வரும்போது வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். சபரிமலைக்கு பக்தர்கள் வரும் விதம், அவர்களை சாந்தப்படுத்தி விடும். பக்தி என்பது எல்லாருக்கும் இருக்கிறது. நான் சபரிமலை ஐயப்பனை விரும்பி வணங்குவேன்.
செருப்பு அணியாமல் விரதமிருந்து நடந்து வந்து சுவாமி தரிசனம் செய்வது உடலில் புத்துணர்ச்சியை நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
ஜோதி தரிசனத்திற்காக வந்துள்ளேன். 2019-ல் பார்த்தோம். அதன்பின்னர், கொரோனாவால் 2 ஆண்டுகள் பார்க்க முடியவில்லை. திரும்பவும் கோயில் திறக்கப்பட்டுள்ளதால் ஜோதி தரிசனத்தை பார்ப்பதற்கு ஆவலாக உள்ளேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் படங்களை தவிர்த்து அடுத்து அவர் இயக்கத்தில் வெளிவந்த பாவக் கதைகள் சுமாரான வரவேற்பை பெற்றது. தற்போது அவர், விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தாவை வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இதையும் படிங்க :
குடும்பத்துடன் திருப்பதி போன பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா.. பக்தர்களுக்கு சொன்ன அந்த ரகசிய இடம்!
தயாரிப்பாளராக கூழாங்கல், நெற்றிக்கண் ஆகிய படங்களை விக்னேஷ் தயாரித்துள்ளார். சமீபத்தில் நல்ல வரவேற்பை பெற்ற ராக்கி தமிழ் படத்தின் விநியோகஸ்தராக விக்னேஷ் இருந்தார்..
இதையும் படிங்க :
விஜய் டிவி சீரியல் உருட்டுகள்.. ஒரு நாள் இரவு போதுமாம் சிலம்பம் கத்துக்க!
பாடலாசிரியராக பல ஹிட் பாடல்களை விக்னேஷ் சிவன் கொடுத்துள்ளார். வலிமை படத்தில் இடம்பெற்றுள்ள அம்மா பாடல், நாங்க வேற மாறி என்பது உள்ளிட்ட பல்வேறு பாடல்களை விக்னேஷ் எழுதியுள்ளார். 2012 முதல் தற்போது வரை தமிழ் சினிமாவில் சுமார் 50 பாடல்களை எழுதியுள்ளார் விக்னேஷ் சிவன்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.