ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இனி தல என்று என்னை அழைக்க வேண்டாம் - நடிகர் அஜித்குமார் வேண்டுகோள்

இனி தல என்று என்னை அழைக்க வேண்டாம் - நடிகர் அஜித்குமார் வேண்டுகோள்

நடிகர் அஜித்குமார்

நடிகர் அஜித்குமார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இனி தன்னை தல என அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு நடிகர் அஜித்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு, இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற்பெயரான அஜித்குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது.

தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களை குறிப்பிட்டு அழைக்க வேண்டாம என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனை நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

First published:

Tags: Actor Ajith