சமீபத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தை மொத்த திமுக-வினரும் கொண்டாடி வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்ட திமுக-வினர் அதை இன்னும் கொஞ்சம் அதிகமாக கொண்டாடுகிறார்கள். இதன் காரணத்தை இங்கே குறிப்பிடுகிறோம்.
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. 1970-களின் பிற்பகுதியில் வடசென்னையில் இருந்த பாக்ஸிங் பரம்பரைகள், எமர்ஜென்ஸியால் அவர்களது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து விவரிக்கும் இத்திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
சார்பட்டா பரம்பரை படத்தில் பாக்ஸிங் தான் பிரதானம் என்றாலும், அப்போதைய அரசியல் சூழலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. திமுக, அதிமுக, காங்கிரஸ், இந்திய குடியரசு கட்சி போன்ற கட்சிகளின் 1975 கால அரசியலை வெளிப்படையாக பேசுகிற இந்த திரைப்படத்தில், எமர்ஜென்ஸி காலகட்டத்தில், திமுகவினர் கைது செய்யப்பட்டதையும் காட்டியிருக்கிறார் இயக்குநர் ரஞ்சித். இதை திமுக-வினர் வெகுவாக கொண்டாடி வருகின்றனர். இதில் கபிலனாக ஆர்யா, ரங்கன் வாத்தியாராக பசுபதி, மாரியம்மாளாக துஷாரா விஜயன் உள்ளிட்ட நடிகர்கள் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட திமுக-வினர் ’சார்பட்டா பரம்பரை’ படத்தை அதிகமாகக் கொண்டாடி வருகிறார்கள். அதற்குக் காரணம் படத்தின் நாயகி துஷாரா விஜயன். மாரியம்மா கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள துஷாரா திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
கழக தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயன் என்ற திமுக-காரர் மகள் தான் #SarpattaParamparai துஷாரா வாம்🔥 pic.twitter.com/SWgMydc4lO
— Surya Born To Win (@Surya_BornToWin) July 25, 2021
திண்டுக்கல் மாவட்டம் சாணர்பட்டி அருகே கன்னியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இவர், கோவையில் பொறியியல் படிப்பை பாதியில் விட்டுவிட்டு, ஃபேஷன் டிசைனிங் படித்துள்ளார். பின்னர் மாடலிங், குறும்படங்கள் என நடிப்பில் கவனம் செலுத்தியுள்ளார். துஷாராவின் தந்தையான விஜயன் திமுகவைச் சேர்ந்தவர். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மற்றும் சாணர்ப்பட்டி தெற்கு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராகவும் உள்ளார். திமுக பிரமுகரின் மகள், திமுகவை பற்றி பேசும் படத்தில் நடித்துள்ளதால் திண்டுக்கல் மாவட்ட திமுகவினர் அதிக உற்சாகத்தில் உள்ளனர்.
அதோடு சமூக வலைதளங்களில் இந்த அப்பா மகளுக்கு வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tamil Cinema