ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

Ponniyin Selvan: மணிரத்னம் இடதுசாரி குணம் கொண்டவர் என்பதற்காக பொன்னியின் செல்வன் படத்தை விமர்சிப்பதா? திமுக எம்.பி திருச்சி சிவா அறிக்கை

Ponniyin Selvan: மணிரத்னம் இடதுசாரி குணம் கொண்டவர் என்பதற்காக பொன்னியின் செல்வன் படத்தை விமர்சிப்பதா? திமுக எம்.பி திருச்சி சிவா அறிக்கை

திருச்சி சிவா - மணிரத்னம்

திருச்சி சிவா - மணிரத்னம்

மணிரத்னம் இடதுசாரி குணம் கொண்டவர் என்ற அடிப்படையில் இந்த படைப்பின் சிறப்புகளைப் பின்னுக்கு தள்ளிவிட்டு விமர்சனங்களை பார்க்க நேர்ந்தது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பொன்னியின் செல்வன் படத்தையும், இயக்குநர் மணிரத்னத்தின் முயற்சியையும் திமுக எம்.பி.திருச்சி சிவா பாராட்டியுள்ளார்.

  இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவான படம் 'பொன்னியின் செல்வன்'. இரண்டு பாகங்களாக உருவான இப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது. இதில் விக்ரம், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஜெயராம், விக்ரம் பிரபு, கிஷோர், பார்த்திபன், ரகுமான் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

  பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்களும் படத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஒருபுறம் மணிரத்னம் எடுத்துக் கொண்ட இந்த முயற்சியே பாராட்டுக்குரியது என்கின்றனர். மறுபுறம் அவர் கதையை சரியாக கையாளவில்லை எனவும் பேச்சுகள் எழுகின்றன.

  இந்நிலையில் திமுக எம்.பி திருச்சி சிவா, பொன்னியின் செல்வன் படம் குறித்த தனது கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “ரொம்பவும் பரிச்சயமான மனதை விட்டு நீங்காத சரித்திர பின்னணியில், சில கற்பனைகளோடு கல்கி அவர்களால் எழுதப்பட்ட காலமெல்லாம் நிலைத்து நிற்கக் கூடிய 'பொன்னியின் செல்வன்'. எம்.ஜி.ஆர். நினைத்து கமல் விரும்பி பல காரணங்களால் உருவாக முடியாத இந்த காவியத்தை, திரைப்படமாக்கிய திரு மணிரத்னத்தை பாராட்டுவதை ஒரு தமிழனின் கடமையாக உணர்கிறேன்.

  வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், நந்தினியாக ஐஸ்வர்யா, குந்தவையாக திரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பாத்திபன் என அனைவரும் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக ஆழ்வார்க்கடியான் ஜெயராம் நடிப்பின் உச்சம். ஏமாற்றமடையவில்லை, குறைகாணும் குணத்தோடு பார்க்காததால்.

  'இந்த காரியத்தை என்னால் மட்டுமே ஆகும் என்று நான் செய்ததாக கருதவில்லை. வேறு யாரும் செய்ய முன்வராததால் நான் செய்கிறேன்' என தந்தை பெரியார் சொல்வதை போல, பலரின் பலநாள் ஏக்கத்தினை போக்க வந்து, அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றிருக்கும் இயக்குனர் மணிரத்னத்தை என் உணர்வு கொண்டோரின் சார்பாக பாராட்ட விரும்புகிறேன்” என நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதோடு, படத்திற்கு வரும் எதிர்மறை விமர்சனங்களுக்காகவே இந்த பாராட்டை எழுதியுள்ளதாக தெரிவித்துள்ள திருச்சி சிவா, மணிரத்னம் இடதுசாரி குணம் கொண்டவர் என்ற அடிப்படையில் இந்த படைப்பின் சிறப்புகளைப் பின்னுக்கு தள்ளிவிட்டு விமர்சனங்களை பார்க்க நேர்ந்ததாகவும், காந்தியையும், அண்ணாவையும் விமர்சித்த இந்த உலகில் இது விசித்திரம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

  Published by:Shalini C
  First published:

  Tags: Ponniyin selvan