அன்பழகன் மரணம் - டி.ராஜேந்தர், லாரன்ஸ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் இரங்கல்

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் மறைவுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அன்பழகன் மரணம் - டி.ராஜேந்தர், லாரன்ஸ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் இரங்கல்
டி.ராஜேந்தர் | ஜெ.அன்பழகன்
  • Share this:
சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளருமான ஜெ.அன்பழகன் உடல்நலக் குறைவால் கடந்த 2-ஆம் தேதி சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார். அவரது மரணம் திமுகவினர் மற்றும் குடும்பத்தாரை சோகத்தில் ஆழ்த்தியது.

கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி மரணமடைந்ததால் அவரது உடல் தமிழக சுகாதாரத்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டு கண்ணம்மாபேட்டையில் அடக்கம் செய்யப்பட்டது.


மறைந்த ஜெ.அன்பழகன் அரசியலைத் தாண்டி சினிமாவில் தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக இருந்தவர். எனவே திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவரும் நடிகருமான டி. ராஜேந்தர் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “சென்னை சேப்பாக்கம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ.வும், எங்கள் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க உறுப்பினருமான ஜெ.அன்பழகன் இன்று இயற்க்கை எய்தியதாக வந்த செய்தி எங்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. அவரது குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

அவரது ஆன்மா சாந்தி அடையவும், அவர்களது குடும்பம் இந்த இழப்பில் இருந்து மீண்டு வரவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேபோல் நடிகர் ராகவா லாரன்ஸ், எனது அறக்கட்டளை குழந்தைகளுடன் மறைந்த முதல்வர் கருணாநிதியை ஒருமுறை சந்தித்த போது எனது சமூக பணிகளை பாராட்டினார் ஜெ.அன்பழகன். அவர் சொன்ன வார்த்தைகளை என்னால் மறக்க முடியாது. அவரது குடும்பத்தாருக்கும் திமுகவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். எனது குழந்தைகளும் நானும் அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திப்போம்” என்று கூறியுள்ளார்.

மேலும் நடிகர் செந்தில், போஸ் வெங்கட் உள்ளிட்டோரும் ஜெ.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: அரசியல்வாதியுடன் சேர்ந்து படம் எடுப்பதா? என்ற எனது ஐயத்தை தகர்த்தெறிந்தவர் - ஜெ.அன்பழகன் மறைவுக்கு அமீர் இரங்கல்
First published: June 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading