• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Actor Vivek: நடிகர் விவேக் கனவை நனவாக்கும் முயற்சியில் திமுக சுற்றுச்சூழல் அணி!

Actor Vivek: நடிகர் விவேக் கனவை நனவாக்கும் முயற்சியில் திமுக சுற்றுச்சூழல் அணி!

விவேக்

விவேக்

நடிகர் விவேக்கின் கனவான ஒரு கோடி மரம் நடும் பணியை திமுக-வின் சுற்றுச்சூழல் அணி தொடரும் என அக்கட்சியின் சுற்றுச்சூழல் அணியின் செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    நடிகர் விவேக்கின் கனவான ஒரு கோடி மரம் நடும் பணியை திமுக-வின் சுற்றுச்சூழல் அணி தொடரும் என அக்கட்சியின் சுற்றுச்சூழல் அணியின் செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி தெரிவித்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவையால் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் நடிகர் விவேக். தான் சொல்ல வரும், கருத்துகளை யார் மனதையும் புண்படுத்தாமல், வெகுஜன மக்களுக்கு கொண்டு சேர்த்தவர். ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அத்தனை பேருடனும் இணைந்து நடித்தவர். சுற்றுச் சூழலில் ஆர்வம் கொண்ட அவர் இதுவரை பல லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

    கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் பாதிக்கப்பட்ட விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு அரசியல் - திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் தங்கள் இரங்கலை நேரிலும், சமூக வலைதளங்களிலும் தெரிவித்தனர். அதோடு விவேக்கின் இறுதி ஊர்வலத்தில் பலர் மரக்கன்றுகளுடன் கலந்துக் கொண்டனர்.



    நடிகர் என்பதைத் தாண்டி, சுற்றுச் சூழலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த விவேக், முன்னாள் குடியரசுத் தலைவரின் வார்த்தைகளை நிறைவேற்றும் வண்ணம் தமிழகம் முழுவதும் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை தனது முக்கியப் பணியாக செய்து வந்தார். தனது இறுதி மூச்சு வரை அதை தொடர்ந்து செய்து வந்தார். இதுவரை 33.23 லட்சம் மரக்கன்றுகளை அவர் நட்டுள்ளார். எதிர்பாராத மரணத்தால், 1 கோடி மரக்கன்று நடும் இலக்கை அவரால் எட்ட முடியவில்லை. விவேக்கின் நினைவாக பிரபலங்களும், ரசிகர்களும் மரக்கன்றுகளை நட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில், ”மறைந்த நடிகர் திரு.விவேக் அவர்கள் 1 கோடி மரக்கன்றுகள் நடுதல் என்ற மாபெரும் பணியில் 37 லட்சம் மரக்கன்றுகளை நட்டு பெரும் சேவையாற்றியுள்ளார். அவர் விட்டுச்சென்ற மகத்தான பணியை கழக சுற்றுச்சூழல் அணி சார்பாக தொடர்வது என்று முடிவெடுத்துள்ளோம்” என திமுக சுற்றுச்சூழல் அணியின் செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: